தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம் ஏராளம்! தாயத்து தகடுகள், தர்ஹா வழிபாடுகள், மௌலிது குப்பைகள் போன்ற இணை கற்பிக்கும் காரியங்களை எதிர்த்ததற்காகவும் மத்ஹபுப் பிரிவினைகளைக் கண்டித்ததற்காகவும் ஏகத்துவ வாதிகள் ஊர் நீக்கம் செய்யப்பட்டனர். ஏன்? தொழுகைக்குக் கூட பள்ளி வாசல்களில் தடை செய்யப்பட்டனர்.
17 December 2010
14 December 2010
கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் முஸ்லிம்களா?
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
(அல்குர்ஆன் 51 : 56)
அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபடவேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதர்களாகிய நம்மை படைத்திருக்கிறான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம். ஆனால் உண்மையான இஸ்லாத்தை பின்பற்றுகின்ற மக்களுக்கு மத்தியில் ஸைத்தானிய அடிச்சுவடுகளை சிறிதும் பிசகாமல் பின்பற்றுகின்ற பரேலவி
Labels:
கொள்கை விளக்கம்
பொதி சுமக்கும் கழுதைகள்
இரமலான் மாதத்திற்கு சிறப்பே அம்மாதத்தில் திருமறைக்குர்ஆன் அருளப்பெற்றதுதான். ஆனால் ஒவ்வொரு வருடமும் இரமலானை அடைகின்ற நாம் எதற்காக இரமலான் சிறப்பிக்கப்பட்டதோ அத்தகைய திருமறைக்குர்ஆனுடைய சட்டங்களை நம் நடைமுறையில் பின்பற்றுகின்றோமா? என்றால் பெரும்பாண்மை இஸ்லாமியர்களின் பதில் இதற்கு இல்லை என்றே இருக்கும்.
தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம்
Labels:
கட்டுரை
13 December 2010
நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம் (கருவளர்ச்சியின் நிலைகள்)
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً بَعَثَ اللَّهُ إِلَيْهَا مَلَكًا فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا ثُمَّ قَالَ يَا رَبِّ أَذَكَرٌ أَمْ أُنْثَى فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ أَجَلُهُ فَيَقُولُ رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ رِزْقُهُ فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَخْرُجُ الْمَلَكُ بِالصَّحِيفَةِ فِي يَدِهِ فَلَا يَزِيدُ عَلَى مَا أُمِرَ وَلَا يَنْقُصُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன்:
விந்து கருப்பைக்குச் சென்று நாற்பத்து இரண்டு இரவுகள் கழிந்ததும் அதனிடம் அல்லாஹ் வானவர் ஒருவரை அனுப்புகிறான். பிறகு அதற்கு உருவமளித்து, அதற்குச் செவிப்புலனையும் பார்வையையும் தோலையும் சதையையும் எலும்பையும் படைக்கிறான்.
Labels:
விஞ்ஞானம்
11 December 2010
ஸலவாத்துன் னாரிய்யா எனும் நரகத்து ஸலவாத்து
ஸலவாத்துன் னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும். னாரிய்யா என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்வித சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள்தான். இதனை 4444 தடவை ஓதினால்
Labels:
கொள்கை விளக்கம்
கண்தானம் செய்தல்
இன்றைய நிலையில் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த தானம் செய்தல் , பார்வையிழந்தவர்களுக்கு கண்தானம் செய்தல் போன்ற நல்ல
காரியங்கள் வலியுறுத்தப் பட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது.
காரியங்கள் வலியுறுத்தப் பட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது.
Labels:
ஆய்வுகள்
நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம் (நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏன் மண்ணால் சுத்தம் செய்ய வேண்டும்?)
அப்துன் நாஸிர், கடையநல்லூர்
عن أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُرِقْهُ ثُمَّ لِيَغْسِلْهُ سَبْعَ مِرَارٍ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (469)
Labels:
விஞ்ஞானம்
நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம் (இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?)
உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர்குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள்உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும்,சத்துப்பொருட்கள் வேறாகவும்பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.
Labels:
விஞ்ஞானம்
10 December 2010
கொள்கை விளக்கம் (நாம் எதைப் பின்பற்ற வேண்டும்?)
இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்குச் சொந்தமான மார்க்கமாகும்.
அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. (3 : 9)
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (3 : 85)
இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதின் உண்மையான பொருள் இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் இஸ்லாமாகக் கருதப்படாது. ஒன்றை சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருக்கும் கிடையாது.
அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. ' (அல்குர்ஆன் 12 : 40)
Labels:
கொள்கை விளக்கம்
பார்வையைப் பாதுகாப்போம்
உண்மையான இறைநம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய பல்வேறு பண்புகளை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் விவரித்துள்ளான். அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் நம்முடைய பார்வையைப் பாதுகாப்பதாகும். இந்த மனித சமுதாயம் ஒழுக்க வீழ்ச்சியடைவதற்கு மிக முக்கியமான ஒரு காரணி பார்வையை தவறான முறையில் பயன்படுத்துவதாகும். இதன் காரணமாகத்தான் இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இறைவன் தன் திருமறையில் கட்டளையிடுகின்றான்.
Labels:
கட்டுரை
குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதின் அடிப்படைகள்
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். பெயர் சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச் சட்டங்களை தெரிந்து கொண்டால் மிக எளிதாக நாம் முடிவெடுத்து விடலாம். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமான பெயர்கள் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகிய வையாகும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : முஸ்லிம் (4320)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகிய வையாகும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : முஸ்லிம் (4320)
Labels:
கட்டுரை
ஏன் (?) என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை...
நம் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் துவங்கிய காலம் முதல் இன்று வரை ஆல விருட்சமாக வேர்விட்டு வானோங்கி வளர்ந்து வருகிறது. அது போல் ஏகத்துவத்திற்கு எதிரான சக்திகளும் அவ்வப்போது உதயமாகி வளர்ந்து வாடிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த ஏகத்துவக் கொள்கை மிகவீரியமாக மக்கள் மத்தியில் வேரூன்றியதற்குக் காரணம் இறையுதவிக்கு அடுத்தபடியாக இஸ்லாம் தொடர்பாக மக்களின் சிந்தனை தூண்டப்பட்டதுதான்.
Labels:
கட்டுரை
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?
“பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்! எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள்! கைத்தறியையும் அந்நூர் அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஹாகிம் (3494)இதே கருத்து தப்ரானியின் முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியை நபி (ஸல்) அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ என்று நாம் எண்ணும் வண்ணம் இந்த செய்தி அமைந்துள்ளது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஹாகிம் (3494)இதே கருத்து தப்ரானியின் முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியை நபி (ஸல்) அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ என்று நாம் எண்ணும் வண்ணம் இந்த செய்தி அமைந்துள்ளது.
Labels:
கட்டுரை
08 December 2010
இறந்தோரை அவுலியா (இறைநேசர்) என நாம் தீர்மானிக்க இயலுமா?
கே.எம். அப்துந் நாஸிர் , கடையநல்லூர்.
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மாற்றுதல் என்பது இல்லை. அதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 10 : 62, 63, 64)
இவ்வசனத்தைச் சிலர் தவறாக விளங்கிக் கொண்டு மகான்களை வழிபடலாம் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் இறை நேசராக வாழ முயல வேண்டும் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது. மகான்களை வழிபடுமாறு கூறவில்லை.
மேலும் அடுத்த வசனத்தில் இறை நேசர்கள் யார் என்ற இலக்கணமும் கூறப்படுகிறது. நம்பிக்கை கொள்வதும், இறைவனை அஞ்சுவதுமே அந்த இலக்கணம்.
Labels:
கொள்கை விளக்கம்
Subscribe to:
Posts (Atom)












