02 February 2011

மதுரை ஸகாத் விவாதம் - ஒரு பார்வை


(மதுரை ஸகாத் விவாதம் தொடர்பான இந்த விமர்சனக் கட்டுரை 5.8.2009 அன்று ஆன்லைன் பிஜே யில் வெளியிடப்பட்டதாகும்)

ஆடிய ஆட்டமென்ன? ஓடிய ஓட்டமென்ன?
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ
 'உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான்.'
(
அல்குர்ஆன் 21:18)
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
'உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது.'
(
அல்குர்ஆன் 17:81)
மேற்கண்ட இறை வசனங்கள் உண்மையான இறை நம்பிக்கையாளர்களுக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன. எப்படிப்பட்ட பெருங்கூட்டங்கள் அணிதிரண்டு நின்றாலும் சத்தியம்தான் வெல்லும் என்பதே அந்த உண்மை.
இன்றைய நிலையில்தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் (வுNவுது) சத்தியப் பிரசாரத்திற்கு எதிராக எத்தனை, எத்தனை எதிர்ப்பாளர்கள்! தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவர்கள் இரு பிரிவினராக உள்ளனர்.
ஒரு கூட்டம் அவர்களுடைய  தவறான கொள்கையை நாம் விமர்சிப்பதால் நம்மை எதிர்க்கிறார்கள்.
ஆனால், இன்னும் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள். இவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் நம்மை எதிர்ப்பதெல்லாம் தங்கள் உள்ளங்களில் கொண்டுள்ள காழ்ப்புணர்வினால் மட்டும்தான். இவர்களில் பலர் மார்க்கப் பிரசாரம் செய்கிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளில் சல்லிக் காசுகளுக்காக தஞ்சமடைந்தவர்கள். அல்லது வெளிநாட்டுக் காசை நம்பி உள்நாட்டில் மார்க்க வியாபாரம் செய்பவர்கள். யு.. அறைகளில் இருந்து கொண்டு, ஒன்றிரண்டு பயான்கள் செய்து கொண்டு, பிரசாரம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள்.
கூலிக்காக மட்டும் மார்க்கத்தைப் பிரசாரம் செய்யும் இந்த மேதாவிகள் (?) தங்களுடைய எஜமானிய விசுவசத்தை அதிகம் வெளிப்படுத்துவார்கள். தங்களுக்குச் சம்பளம் கொடுக்கும் அரபிகள் என்ன சொன்னார்களோ, அதுதான் இவர்களின் மார்க்கம். தங்களுடைய எஜமானர்களுக்கு எதிராக யார் எந்த உண்மையைச் சொன்னாலும் மார்க்கத்தின் பெயரால் அவர்களை எதிர்க்கத் தயங்க மாட்டார்கள். அதற்காக மார்க்கத்தின் பெயரால் எத்தகைய இருட்டடிப்பையும் செய்வதற்குத் தயாராவார்கள்.
சல்லிக் காசுகளுக்காக சத்திய மார்க்கத்தின் அடிப்படையைக் கூட மாற்றியவர்கள்தான் இவர்கள்! குர்ஆன், ஹதீஸ் மட்டும்தான் மார்க்கம் என்ற கொள்கையிலிருந்த இந்த மதனிகள், உமரிகள்இதே கருத்தை மிகவும் வலிமையாக இவர்களை விடவும் அழுத்தமாக ஆழமாக தவ்ஹீத் ஜமாஅத் பிரசாரம் செய்த காரணத்தால், இஸ்லாத்தின் அடிப்படைகள் (குர்ஆன், ஹதீஸ், ஸஹாப்பாக்களைப் பின்பற்றுவது ஆகிய) மூன்று என மாற்றிக் கொண்டுள்ளார்கள். கோவை ஜாக் பள்ளியில் உரையாற்றிய இக்பால் மதனீ அவர்கள் இதை மிகத் தெளிவாகவே உறுதிப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு கூறுவதால் அனைத்து மதனிகளும், உமரிகளும் இப்படித்தான் என எண்ணி விடாதீர்கள். இவர்களில் மிகவும் நல்லவர்கள் பலர் உள்ளனர்.
இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகச் செய்த மாபாதகச் செயல்கள் அனைத்தையும் நாம் பட்டியலிட்டு விட முடியாது. இவற்றையெல்லாம் நாம் இங்கே கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
ஸகாத் தொடர்பாக இறைச் செய்தியான குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தெளிவான சட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து வைத்த போது 'தவ்ஹீத் ஜமாஅத்தினர் மதம் மாறி விட்டனர்' என்று எந்த வித ஞானமுமின்றி ஃபத்வா கொடுத்தவர்கள்தான் இந்தக் கருங்காலிகள். தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு எதிராக இவர்கள் செய்த அவதூறுப் பிரசாரம் கொஞ்ச நஞ்சமல்ல! விவாதக் களத்தில் சந்திக்கத் துணிவில்லாமல் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் இவர்கள் ஓடிய ஓட்டம்தான் என்ன...?!
என்ன ஆனாலும் பரவாயில்லை! இவர்களை விவாதக் களத்தில் சந்தித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இவர்களின் கருத்தைப் பிரதிபலிக்க கூடிய, இவர்களின் எழுத்துக்களுக்கு முகமூடியாகப் பயன்படுத்தப்பட்ட நூர் முஹம்மது அவர்களை தன்னுடைய சொந்தச் செலவில் தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தது. ஒரு சில செலவுகளைத் தவிர அனைத்து செலவுகளுக்கும் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பேற்றுக் கொண்டது.
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை எந்த ஒரு விவாதமாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்ளூ உண்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற இலட்சியங்களோடுதான் களம் இறங்குகிறோம். அதன் அடிப்படையில் தான் மதுரையில் பிப்ரவரி 10, 11 ஆகிய திகதிகளில் நடைபெற்ற ஸகாத் தொடர்பான விவாதமும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஸகாத் கொடுத்து விட்டால் அதற்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஸகாத் கொடுக்கத் தேவையில்லை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.
ஸகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பது மதுரையைச் சார்ந்த நூர் முஹம்மது பாகவி அவர்களின் நிலைப்பாடாகும்.
தான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவரல்ல என்று இவர் சொல்லிக் கொண்டாலும், தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்ட ஜாக் மற்றும் வெளிநாட்டு மார்க்க வியாபாரிகள் சிலரை பினாமியாகக் கொண்டவராவார்.

விவாதக் களம்

முதல் நாள் காலை 10 மணியளவில் விவாதம் துவங்கிய உடன் மவ்லவி  பி.ஜே. அவர்கள் முதலில் பேசத் துவங்கினார்கள். அவர் தனது முன்னுரையில், எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவனிடம் தவறுகள் ஏற்படத்தான் செய்யும். இறைவன் மட்டுமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் என்ற அடிப்படையில், ஸகாத் தொடர்பாகப் பொது மேடைகளில், தான் பேசும் போது எடுத்து வைத்த சில உதாரணங்கள் தவறானவை என்பதை முதலில் எடுத்துரைத்தார். பின்னர் பின்வரும் ஆதாரங்களை முன் வைத்தார்.
1
ஒருவன் இஸ்லாத்தைத் தழுவும் போது, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூற வேண்டும் என மார்க்கம் நமக்குக் கட்டளையிட்டுள்ளது.
2.
ஒருவனுக்குப் புதையல் கிடைத்தால், ஐந்தில் ஒன்றை அவன் ஸகாத்தாக வழங்க வேண்டும் என்று நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
3. 
போர்க்களங்களில் கைப்பற்றப்படும் 'கனீமத்' பொருட்களில் ஐந்தில் ஒன்றை வழங்க வேண்டும் என்ற மார்க்கக் கட்டளை.
4.
ஒருவன் இறந்து விட்டால் அவனுடைய சொத்துக்களைப் பங்கிட வேண்டும் என்ற மார்க்கக் கட்டளை.
5.
விவசாயப் பயிர்களுக்கு அறுவடை காலத்தில் ஸகாத் வழங்க வேண்டும் என்ற மார்க்கக் கட்டளை.
6.
விபச்சாரம் செய்தவர்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால் அவர்கள் 100 கசையடிகள் அடிக்க வேண்டும் என்ற மார்க்கக் கட்டளை
இன்னும் பல மார்க்கக் கட்டளைகளை எடுத்து வைத்து இவையனைத்தும் எவ்விதக் காலமும், நிபந்தனைகளுமின்றி இடப்பட்ட கட்டளைகள். இவையனைத்தையும் ஒரு தடவை என்று தான் நாம் விளங்கிக் கொள்கிறோம். இவற்றை ஒரு தடவை நிறைவேற்றிய பின்பு மீண்டும் மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று ஒருவர் கூறினால், அவர்தான் அதற்கான ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அவருடைய கருத்து தவறானதாகும்.
அது போன்றுதான் ஸகாத் தொடர்பான விஷயத்தையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஸகாத்தை நிறைவேற்றுங்கள் என்பது மட்டும்தான் மார்க்கக் கட்டளை. அதனை வருடா வருடம், ஒரே பொருளுக்கு மீண்டும் மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்குக் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லை. எனவே மற்ற கட்டளைகளை நாம் எப்படி விளங்கிக்கொள்கிறோமோ அது போன்றுதான் இதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
யார் ஒரே பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்களோ அவர்கள்தான் அதற்கான ஆதாரங்களைச் சமர்பிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பி.ஜே. அவர்கள் தெளிவான முறையில் தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்தார்கள்.
பலவீனமான செய்தியை ஆதாரமாகக் காட்டினார்கள்.
ஸகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தரும் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸைக் காட்டுங்கள். விவாதத்தை முடித்துக் கொள்வோம் என்று பி.ஜே. கேட்டார்.
தனது ஒவ்வொரு வாய்ப்பின் போதும் பி.ஜே. இவ்வாறு கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால், நூர் முஹம்மது பாகவி சம்பந்தமில்லாமல் சுய புராணம் பாடினார். பி.ஜே. அவர்கள் எடுத்து வைத்த மேற்கண்ட வாதங்களுக்குப் பதில் என்ற முறையில் சில கருத்துக்களைக் கூறினார். 'நான் ஆதாரத்தை எடுத்துக் காட்டுவேன்ளூ காட்டாமல் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன்' என்று சொன்னாரே தவிர பாதி நாள் முடியும் வரை ஆதாரத்தை எடுத்துக் காட்டவில்லை. தனது பல வாய்ப்புக்களை பாழ் படுத்தினார்.
பாதி நாளை இவ்வாறு கடத்தி விட்டு நூர் முஹம்மது அவர்கள் தன்னுடைய முதல் ஆதாரமாகப் பின்வரும் பலவீனமான ஹதீஸை எடுத்து வைத்து வாதம் செய்தார், நூர் முஹம்மது பாகவி.
உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து, அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்). இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்) கடமையில்லை. இருபது தீனார் இருந்து, அதில் ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அரை தீனார் (ஸகாத்) ஆகும். இந்தக் கணக்கின் அடிப்படையில் இதற்கு அதிகமானவைகளுக்குக் கணக்கிட வேண்டும்.
அறிவிப்பவர்: அலீ (ரழி)
நூல் திர்மிதி 1342
கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு இந்த ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை.
ஒரு பொருள் நம்முடைய கையில் கிடைத்தால், அதற்கு அன்றே ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை. அது கிடைத்ததிலிருந்து ஒரு வருடம் கழிந்த பிறகுதான் அதற்கு ஸகாத் கடமையாகும் என்ற கருத்தைத்தான் மேற்கண்ட செய்தி கூறுகிறது.
 மேலும், இது பலவீனமானது என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக விவாதம் செய்த பி.ஜே. அவர்கள் பல வகைகளில் நிரூபித்தார்கள்.

பலவீனம் என்பதற்கு முதல் சான்று

இந்த ஹதீஸ் பலவீனம் என்பதை நூர் முஹம்மது அவர்கள்தான் எழுதியதாகச் சொல்லிக் கொள்ளும் நூலில் ஒப்புக் கொண்டுள்ளார். இதோ அவர் தன்னுடைய வெளியீட்டில் கூறுவதைப் பாருங்கள்.
அனாதைகளின் சொத்தை வியாபாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நபிமொழி.
அவர்கள் வழங்கியதாகக் கூறப்பட்ட நபிமொழி. }t{இரண்டு ஆண்டிற்கான ஸகாத்தை முன் கூட்டியே அப்பாஸ்
ஒரு பொருளை ஒருவன் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் நிறைவடையும் வரை ஸகாத் இல்லை என்ற நபிமொழி.

கால் நடைகளின் ஸகாத் பற்றிய நபிமொழி.

மேற்கூறப்பட்டவையில் முதல் மூன்று நபிமொழிகளும் பலவீனமானவை. கால்நடைகள் சம்பந்தப்பட்ட நபிமொழியில் விதண்டாவாதம் பேசி மக்களைத் திசை திருப்புவார்கள் என்பதை நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால், அதனை நமது மறு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டவில்லை என்பது மட்டுமல்ல, வெள்ளி மேடையிலும் இவற்றை உதாரணத்திற்குக் கூட நாம் எடுத்துக் காட்டவில்லை.
(
ஸகாத் சட்டங்கள்: ஜனவரி 2006 'ஏகத்துவம்' மாத இதழில் மீண்டும் குழப்பங்கள் என்ற நூர் முஹம்மத் அவர்களின் வெளியீடு.)
அவர்களே பலவீனம் என்று ஒப்புக் கொண்ட செய்தியைத்தான் விவாதத்திற்காக மனமுரண்டாக 'ஸஹீஹ்' என்று கூறி வாதிட்டார்கள்.

இரண்டாவது சான்று

இந்த ஹதீஸில் இடம் பெறும் அறிவிப்பாளரான ஆஸிம் பின் லமுரா என்பவர் பலவீனமானவராவார்.
'
இவர் மனனத் தன்மையில் மிகவும் மோசமானவராவார். தெளிவாகத் தவறு செய்யக் அவர்களின் சொந்தக் கூற்றில் அதிகமானவற்றை நபியவர்கள் }t{கூடியவர். அலீ  கூறியதாக அறிவிப்பவராவார். (இவர் அறிவித்திருப்பது அலீயின் சொந்தக் கூற்றுதான் என்பது) அறியப்படும் போது, விடப்படுவதற்கு தகுதியானவராவார்' என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரைப் பற்றிக் குறை கூறியுள்ளார்கள்.
'
இவருடைய அறிவிப்பை வலுவூட்டக் கூடிய வகையில் உறுதியானவர்கள் எவரும் அறிவிக்காத, தவறான செய்திகளை அலீ அவர்களிடமிருந்து இவர் தனித்து அறிவிக்கிறார். குழப்பங்களே இவரிடமிருந்துதான்' என இமாம் இப்னு அதீ அவர்களும் இவரைக் குறை கூறியுள்ளார்.
நூற்கள்: அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், பாகம் 2, பக்கம் 69
அல் மஜ்ரூஹீன் பாகம் 2, பக்கம் 125.
எனவே ஆஸிம் பின் லமுரா அறிவிக்கக் கூடிய அனைத்து அறிவிப்புகளும் பலவீனம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

மூன்றாவது சான்று

ஆஸிம் பின் லமுரா என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுவதாலேயே இது ஆதாரமற்ற செய்தியாகி விடுகின்றது. மேலும், இது அலீ அவர்களுடைய சொந்தக் கூற்றுதான் என்பதைப் பல அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேற்கண்ட செய்தியை நபியவர்கள் கூறியதாக ஹாரிஸ் என்பவர் அறிவித்துள்ளார். இவர் பெரும் பொய்யராவார். எனவே, இவருடைய அறிவிப்புகள் ஆதாரமாகக் கொள்ளப்படாது.
ஆஸிம் இதனை அலீயுடைய சொந்தக் கூற்றாகதான் அறிவித்துள்ளார். ஆனால், இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜரீர் என்பவர்தான் ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவருடைய அறிவிப்புக்களையும் தெளிவுபடுத்தாமல் இருவருமே நபியிடமிருந்து அறிவிப்பதாக இணைத்துக் கூறி விட்டார்.
ஹதீஸ்களை அறிவிப்பதில் ஜரீர் என்பவரை விட மிக உறுதி வாய்ந்தவர்களான சுஃயான், ஷுஃபா, மஃமர் ஆகியோர் இதனை ஆஸிம் பின் லமுரா என்பவர் வழியாக அலீயடைய சொந்தக் கூற்றாக மட்டுமே அறிவித்துள்ளனர்.
எனவே மிக உறுதி வாய்ந்தவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கும் ஜரீர் என்பவருடைய அறிவிப்பு நிராகரிக்கத்தக்கதாகும்.
இந்தக் குறைகளை இமாம் அல்பானி அவர்களும் தன்னுடைய இர்வாவுல் கலீல் என்ற நூலில் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இந்தச் செய்தி அலீயுடைய சொந்தக் கூற்றுதான் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.

நான்காவது சான்று

இந்தச் செய்தியை அபூ இஸ்ஹாக் என்பவரிடமிருந்து ஜரீர் என்பவர் அறிவித்துள்ளதாக அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் ஜரீர் என்பவர் அபூ இஸ்ஹாகிடமிருந்து இதனைச் செவியேற்கவில்லை. இருவருக்கும் மத்தியில் ஹஸன் பின் உமாரா என்பவர் விடுபட்டுள்ளார். இவர் பலவீனமானவராவார்.
இந்தச் செய்தியை அபூதாவூதிற்கு அறிவித்த சுலைமான் அவர்களை விட மிக உறுதியானவர்களான ஸஹ்னூன், ஹர்மலா, யூனுஸ், பஹ்ர் பின் நஸ்ர் இன்னும் பலர் அபூ இஸ்ஹாக்கிடமிருந்து ஹஸன் பின் உமரா வழியாகத்தான் அறிவித்துள்ளார்கள்.
இப்னுல் மவ்வாக் என்ற அறிஞர் இந்தக் குறைகளைத் தெளிவுபடுத்தியுள்ளார். இதனை இமாம் இப்னு ஹஜர் அவர்களும் தன்னுடைய தல்கீஸ் (பாகம் 2, பக்கம் 174) என்ற நூலிலே உறுதிபடுத்தியுள்ளார்கள்.
எனவே மேற்கண்ட செய்தி அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும். இந்த அடிப்படையிலும் இது ஆதாரத்திற்கு ஏற்க முடியாததாகிறது.
இப்படிப்பட்ட பல பலவீனங்கள் இந்தச் செய்தில் இருப்பதை எடுத்துரைத்து இது ஒரு போதும் ஆதாரத்திற்குத் தகுந்ததல்ல என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக மவ்லவி பி.ஜே. அவர்கள் ஆணித்தரமாக பாமரனுக்கும் விளங்கும் வகையில் எடுத்துரைத்தார்கள்.
இவற்றிற்கெல்லாம் சரியான எந்த ஒரு பதிலையும் எடுத்துரைக்காத நூர் முஹம்மது அவர்கள் ஆஸிம், ஆஸிம் என்றே முதல் நாளின் கடைசி அமர்வு வரை சொல்லிக் கொண்டிருந்தார்.

முறை தவறிய விவாதம்

தன்னிடம் பலமான ஆதாரம் இருப்பதாகப் பூச்சாண்டி காட்டிய நூர் முஹம்மது அவர்கள் மேற்கண்ட பலவீனமான செய்தியைத்தான் மிகப் பெரும் ஆதாரமாக எடுத்து வைத்தார்.
மற்ற சான்றுகளை எடுத்து உரைக்குமாறு பல முறை கூறிய போதும் அவற்றைக் கூறாமல் முதல் நாளின் ஆகக் கடைசியில் அது வரை கூறாத செய்திகளை எடுத்து வைத்தார். இது பார்வையாளர்களுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் மறு நாள் கேள்வி பதில்தான். அவற்றில் கேட்கப்படக் கூடிய கேள்விகளுக்குத்தான் பதிலளிக்கப்படுமே தவிர விவாதம் செய்வதைப் போன்று தவறுகளை விளக்கிக் கூற முடியாது.
எனினும் நூர் முஹம்மது அவர்கள் ஆகக் கடைசியில் எடுத்து வைத்து ஸஹீஹ் என்று வாதிட்ட செய்திகள் பலவீனமானவை தான் என்பதற்கான சான்றுகளை வாய் திறக்க முடியாத அளவிற்கு ஆணித்தரமாக மறு நாள் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் பி.ஜே. அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
கடைசி வாய்ப்பில் எடுத்து வைக்கப்பட்ட சான்றுகள்
நூர் முஹம்மது முதல் நாள் முழுவதும் அவருக்குரிய சான்றுகளை எடுத்து வைக்காமல் அவரோடு முடியவிருந்த கடைசி வாய்ப்பில் பின்வரும் செய்திகளை எடுத்து வைத்தார்.
1.
அபூதாவூதில் வந்துள்ள முஆவியா அல் காளிரி அவர்கள் அறிவிப்பதாக இடம் பெற்ற செய்தி.
2.
ஒரு பொருளுக்கு ஒரு வருடம் நிறைவடையாத வரை ஸகாத் இல்லை என்ற இப்னு உமர் (ரழி) அவர்களின் சொந்தக் கூற்று.
3.
இப்னு ஸிஹாப் என்பவர் அறிவிக்கும் வரலாற்றுச் செய்தி.
4.
ஆட்டுடைய ஸகாத் பற்றி வரக்கூடிய செய்தி
இது போன்ற செய்திகளை எடுத்துக் கூறி மீண்டும் மீண்டும் வருடா வருடம், கொடுத்த பொருளுக்கே ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற இல்லாத கருத்தை வலியுறுத்திக் கூறினார். இவை அனைத்திற்கும் மறு நாள் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் தெளிவாக பி.ஜே. அவர்களால் பதிலளிக்கப்பட்டது.

இரண்டாம் நாள் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி

இரண்டாம் நாள் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் இங்கு எழுதப்படவேண்டிய அளவிற்கு எந்த ஒரு கருத்தும் நூர் முஹம்மது அவர்கள் அளித்த பதிலுரையில் இடம் பெறவில்லை.
ஆனால் பி.ஜே. அவர்கள் முதல் நாள் கடைசியில் நூர் முஹம்மது அவர்களால் ஸஹீஹானது என்று எடுத்து வைக்கப்பட்ட ஆதாரங்களின் தரத்தினை தெளிவாக எடுத்துரைத்தார்.
அபூதாவூதில் இடம் பெற்ற செய்தி என்பதற்கான ஆதாரங்கள்
முதலில் நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அபூதாவூதில் இடம் பெற்ற இந்தச் செய்தி இதே கருத்தில் இன்ன பிற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் இவையனைத்தும் பலவீனம் என்பதை நூர் முஹம்மது அவர்களே ஏகத்தவத்திற்கு எதிராக அவர் எழுதியதாகக் கூறும் நூலில் ஒத்துக் கொண்டுள்ளார்.
அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் மட்டும் சரியானது என்று நூர் முஹம்மது வாதிட்டார்.
ஆனால் அபூதாவூதில் இடம் பெற்ற முஆவியா அல் காளிரி அவர்கள் அறிவிக்கும் செய்தியும் பல வகைகளில் பலவீனமாகும்.
முதலாவது இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களான ஜுபைர் பின் நுஃபைர் என்பவருக்கும் யஹ்யா என்பவருக்கும் மத்தியில் ஒரு அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார்.
ஜுபைர் என்பவரிடம் யஹ்யா என்பவர் செவியேற்கவில்லை என்பதை தஹ்தீப் மற்றும் துஹ்ஃபதுத் தஹ்ஸீல் போன்ற நூலாசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்துள்ளனர். எனவே சந்திக்க வாய்ப்பிருக்கலாம் என்ற அடிப்படையில் நூர் முஹம்மது அவர்கள் எடுத்து வைத்த வாதமும் தவிடு பொடியாகிவிட்டது.
இருவருக்கும் இடையே சந்திப்பு இல்லை என்பதை ஒப்புக் கொண்ட நூர் முஹம்மது வேறொரு வகையில் இதைத் தூக்கி நிறுத்த முயன்றார். அதாவது ஜுபைர் என்பவரிடம் யஹ்யா என்பவர் செவியேற்காவிட்டாலும் இருவருக்கும் இடையே விடுபட்டவர் அப்துர் ரஹ்மான் என்பது வேறு நூல்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர் நம்பகமானவர் என்பதால் இதில் உள்ள குறைபாடு அதன் மூலம் நிவர்த்தியாகும் என்று வாதிட்டார்.
எந்த ஹதீஸை பலவீனமானது என்று அவரே ஒப்புக் கொண்டாரோ அந்த அறிவிப்புகளையே மேற்கண்ட ஹதீஸை வலுப்படுத்தும் ஆதாரமாக, 'வேறு நூல்களில் தெளிவுபடுத்தப்படுள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு பலவீனமான ஹதீஸைத் தூக்கி நிறுத்த இன்னொரு பலவீனமான ஹதீஸைக் கொண்டு முட்டுக் கொடுத்தார்.
தப்ரானியில் உள்ள அந்த பலவீனமான அறிவிப்பு துணைச் சான்றாக கூட எடுக்க முடியாத அளவிற்குப் பலவீனமானதாகும்.
அதனுடைய அறிவிப்பாளரான அபூ தகீ என்பவர் துணைச் சான்றாக எடுக்க முடியாத நிலையில் உள்ளவராவார். இதனை ஹதீஸ் கலை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். முட்டுக் கொடுப்பதற்கு முருங்கைக் கட்டையைக் கொண்டு வரக் கூடாது என்பார்கள். தப்ரானியுடைய அறிவிப்பு முருங்கைக் கட்டையைப் போன்று மிகப் பலவீனமானவர் இடம் பெற்ற அறிவிப்பு என்பதை பி.ஜே. அவர்கள் தெளிவாக விளக்கினார்கள்.

நூர் முஹம்மத் கூறிய புருடா கதை

நம்முடைய கைகளில் உள்ள அபூதாவூது பிரதியில்தான் இவர் விடுபட்டுள்ளார். ஆனால் இமாம் இப்னு ஹஜர் அவர்களிடம் இருந்த அபூதாவூத் பிரதியில் அவர் விடுபடவில்லை. இந்தக் கருத்தை அவர் இஸாபாவில் தெளிவுபடுத்தியுள்ளார் என்று நூர் முஹம்மது அவர்கள் ஒரு புருடாவை அவிழ்த்து விட்டார். இதே கருத்தை அவர் ஏகத்துவத்திற்கு எதிராக தான் எழுதியதாகச் சொல்லிக் கொள்ளும் நூலில் கூறியுள்ளார்.
'
இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தன்னிடம் அபூதாவூத் பிரதி இருந்தது எனக் கூறியதாக இஸாபாவில் இல்லையே!' என்று பி.ஜே. அவர்கள் எடுத்துக் காட்டினார். இப்போதுதான் நூர் முஹம்மதின் புருடா மக்களுக்குத் தெளிவானது.
இமாம் இப்னு ஹஜர் அவர்களிடம் தனியாக அபூதாவூதின் எந்த ஒரு பிரதியும் இருக்கவில்லை என்பதை இப்னு ஹஜரின் கூற்றைக் கொண்டே பி.ஜே. நிரூபித்துக் காட்டினார்.
எனவே 'இப்னு ஹஜர் அவர்களிடம் தனியாக ஒரு அபூதாவூத் பிரதி இருந்தது. அதில் அறிவிப்பாளர் விடுபடாமல் இருந்தது' என நூர் முஹம்மது கூறியது பொய்யான தகவலாகும் என்பதை பி.ஜே. தெளிவுபடுத்தினார்.

அம்ரு பின் ஹாரிஸ் என்ற அறிவிப்பாளரைப் பற்றிய விளக்கம்

மேலும் மேற்கண்ட செய்தியை இமாம் அபூதாவூத் அவர்கள் அம்ர் பின் ஹாரிஸ் என்பவரின் குடும்பத்தாரிடம் இருந்த புத்தகத்தில் படித்ததாகக் கூறியுள்ளார்கள்.
'
அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாதவராவார்' என்பதை இமாம் தஹபீ அவர்களின் மீஸானுல் இஃதிதால் மற்றும் இமாம் இப்னு ஹஜர் அவர்களின் தஹ்தீப் மற்றும் இப்னு அபீ ஆஸிம் அவர்களின் அஸ்ஸுன்னா என்ற நூலிலும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற யாரென்றே அறியப்படாதவர்களைக் கூட இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் தன்னுடைய ஸிகாத் என்ற நூலில் நம்பகமானவர்கள் பட்டியலில் கூறி விடுவார். எனவே இப்னு ஹிப்பானுடைய விமர்சனத்தை மட்டும் வைத்து ஒருவரை நம்பகமானவர் என்று தீர்மானித்து விட முடியாது மேலும் இப்னு ஹிப்பான் மட்டும் யாரை நம்பகமானவர்கள் என்று கூறியுள்ளாரோ அவர்களுக்குத்தான் இமாம்; தஹபீ அவர்கள் தன்னுடைய காஷிஃப் என்ற நூலில் உஸ்ஸிக (நம்பகமானவர் எனக் கருதப்பட்டுள்ளார்) என்ற வாசகத்தைப் பயன்படுத்துவார் என்பதை பி.ஜே. அவர்கள் சிறு குழந்தைக்கும் விளங்கும் வண்ணம் தெளிவாக எடுத்துக் கூறி இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதுளூ இதை ஒரு போதும் ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக விளக்கினார்கள்.

ஆடுகளின் ஸகாத் பற்றிய ஹதீஸ்

தக்க ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் நூர் முஹம்மது அவர்கள் ஆதாரம் காட்டினார்கள்.
இந்த வகையில் அவர் வைத்த மற்றொரு ஆதாரம் ஆடுகளின் ஸகாத் பற்றிய ஹதீஸை தன்னுடைய இஷ்டத்திற்கு வளைத்ததாகும்.
ஒரு மனிதனிடம் நாற்பது முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஸகாத் ஒரு ஆடு ஆகும். 121 முதல் 200 வரை இரண்டு ஆடுகளாகும். 201 முதல் 300 வரை மூன்று ஆடுகளாகும். 300க்கு மேல் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு வீதம் ஸகாத் ஆகும்.
இந்த கருத்தில் அமைந்த ஹதீஸை தனது கருத்தை நிரூபிக்கும் ஆதாரமாக எடுத்து வைத்தார்.
இந்த ஆடுகளின் ஸகாத் பற்றிய ஹதீஸில் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்றோ, மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்றோ மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ எங்கும் கூறப்படவில்லை.
ஆனால் ஒரு பொருளுக்கு ஒரு வருடம் நிறைவடையாத வரை ஸகாத் இல்லை என்ற பலவீனமான செய்தியைச் சம்பந்தமில்லாத ஆட்டோடு இணைத்து தேவையில்லாத வியாக்கினம் கொடுத்து நூர் முஹம்மது அவர்கள் தானும் விளங்காமல் மக்களையும் குழப்பினார்.
இதை அவர்களின் தரப்பில் வந்தவர்களே தெளிவாக விளங்கிக் கொண்டனர். இது விவாத சிடிக்களை பார்ப்பவர்களுக்குத் தெளிவாக விளங்கும்.

இப்னு உமர் கூற்றை ஆதாரமாகக் கொள்ளலாமா?

கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு நூர் முஹம்மது அவர்கள் எடுத்து வைத்த ஆதாரங்கள் மிகப் பலவீனமானவை என்பதை அவர்கள் அணியின் சார்பாக வந்தவர்களே தெளிவாக விளங்கிக் கொண்டனர்.
எனவே அவர்களுடைய அணியைச் சார்ந்த ஒருவர், 'நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதாக வரக்கூடிய செய்திகள் பலவீனமானவையாக இருந்தாலும் ஸஹாபாக்களின் சொந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ளலாமல்லவா? குறிப்பாக இப்னு உமர் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா?' என்ற கருத்தில் ஒரு கேள்வியைத் தொடுத்தார்.
இதற்குப் பதிலளித்த மவ்லவி பி.ஜே. அவர்கள், நாம் இறைச் செய்தியாகிய குர்ஆன், ஹதீஸை மட்டும்தான் பின்பற்ற வேண்டும்ளூ இந்த இரண்டின் அடிப்படையில்லாமல் யாருடைய கூற்றும் மார்க்கமாகாது என்பதைத் தெளிவாக விளக்கினார்கள். மேலும் நீங்கள் எந்த இப்னு உமரின் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறீர்களோ அதே இப்னு உமர்தான் நகைகளுக்கு ஸகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். இதே கருத்தை இன்னும் பல பெரும் பெரும் ஸஹாபாக்கள் கூறியுள்ளனர். எனவே இப்னு உமரின் கருத்தை ஒருவர் ஏற்று தன்னுடைய சொத்து முழுவதையும் நகையாக மாற்றி வைத்துக் கொண்டு அதற்கு அவர் ஸகாத் கொடுக்காமல் இருந்தால் அவர் செய்தது சரியென்று நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?
எனவே குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கச் சட்டமாக ஆகுமே தவிர ஸஹாபாக்களின் சொந்தக் கருத்து ஒரு போதும் இறைச் செய்தியாக முடியாது என்பதைத் தெளிவாக விளக்கினார்கள்.
மேலும் இப்னு ஸிஹாப் என்பவர் அறிவித்ததாக நூர் முஹம்மது அவர்கள் எடுத்து வைத்த செய்தியும் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது. இப்னு ஸிஹாப் என்பவர் நபியுடைய காலத்தில் பிறந்தவரில்லை. அபூபக்கர் (ரழி) அவர்களிடமோ, உமர் (ரழி) அவர்களிடமோ எந்தச் செய்தியையும் இவர் செவியேற்கவில்லை. எனவே இவர்கள் செய்ததாக இப்னு ஸிஹாப் என்பவர் ஒரு செய்தியை அறிவித்தால் அது ஒரு போதும் மார்க்க ஆதாரம் ஆகாது என்பதையும் பி.ஜே. அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

கலகலப்பாக முடிந்த விவாதம்

விவாதத்தில் நடைபெற்ற ஒவ்வொரு விஷயத்தையும் நாம் வரிக்கு வரி கூறவில்லை. சில முக்கியமான கருத்துக்களைத்தான் இங்கு நாம் கூறியுள்ளோம்.
இரண்டாவது நாளின் கடைசி அமர்வில் பி.ஜே. அவர்களின் வலிமையான வாதங்களுக்குப் பதில் கூற முடியாமல் திணறிய நூர் முஹம்மது அவர்கள் தன்னுடைய அப்பாவித் தனமான பேச்சின் மூலம் அந்த அவையைக் கலகலப்பாக்கினார்.
வாதங்களுக்குப் பதில் கூற முடியாமல் 'நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், சிடியை மீண்டும் மீண்டும் போட்டுக் பாருங்கள். நான் சரியாகப் பேசியிருப்பேன்' என்று தனக்குத் தானே சமாதானம் கூறி பயான் செய்ய ஆரம்பித்தார்.
விவாதத்தின் ஒரு கட்டத்தில் பி.ஜே. அவர்கள் இரு அறிவிப்பாளர்களைப் பற்றி பேசும் போது அவர்களுடைய பெயரை மாற்றிக் கூறி விட்டார்கள். பிறகு சரியாக திருத்திக் கூறினார்கள். உடனே நூர் முஹம்மது அவர்கள் 'பார்த்தீர்களா? பி.ஜே. தடுமாறி விட்டார். எனவே நான் விவாதத்தில் ஜெயித்து விட்டேன்' என்று கூறினார். ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் அவர் இவ்வாறு பேசிய பின்பு அடுத்த கணமே அவரிடம் பல தடுமாற்றங்களை அல்லாஹ் ஏற்படுத்தினான்.
இதைச் சுட்டிக் காட்டிய பி.ஜே. அவர்கள் 'ஒரு மனிதன் பேசும் போது ஏற்படுகின்ற நாக்குளறல்களை ஒரு போதும் சத்தியத்திற்கு அளவு கோலாகக் கொள்ளக் கூடாது. மூஸா நபி அவர்கள் கூட தன்னுடைய நாக்கின் முடிச்சுகளை அவிழ்க்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். எனவே மூஸா நாக்குளறல் உடையவராக இருந்தால் அவர் சத்தியத்தில் இல்லை என்று கூற முடியுமா?' என்பதை விளக்கி, நூர் முஹம்மதிடம் ஏற்பட்ட இன்னும் பல தடுமாற்றங்களை எடுத்துக் கூறினார்கள்.
இறுதியில், இருவரும் 'விவாதத்தில் மனம் புண்படும்படி ஏதாவது வார்த்தை பேசியிருந்தால் அதனைப் பொருட்படுத்தாமல் விட வேண்டும்' என கேட்டுக் கொண்டனர். மேலும், விவாதத்திற்கான செலவு முழுவதையும் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றிருந்ததால் அதில் ஏற்பட்ட குறைபாடுகளையும் பொருட்படுத்தாமல் விடுமாறு பி.ஜே. அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொண்டார்கள்.
'
ஆடிய ஆட்டம் என்ன? ஓடிய ஓட்டம் என்ன?' என்பார்கள். அது போன்று தான் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து ஸகாத் விஷயத்தில் ஒரு சட்டத்தைத் தெளிவாகக் கூறியதற்காக இவர்கள் ஆடிய ஆட்டத்தை மக்கள் கண்டிருப்பார்கள். விவாதத்திலும், விவாதத்திற்குப் பிறகும் இவர்கள் ஓடும் ஓட்டத்தையும் மக்கள் காண்கிறார்கள்ளூ இனியும் காண்பார்கள்.
பின்வரும் இறைவனின் வார்த்தைகள் ஒரு போதும் பொய்யாகாது என்பதை மதுரையில் நடைபெற்ற ஸகாத் தொடர்பான விவாதம் மீண்டும் நிரூபித்தது.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான். (அல்குர்ஆன் 21:18)
உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது. (அல்குர்ஆன் 17:84)

பண்டமில்லை! அதனால் பதிலுமில்லை!

 ஸகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஸகாத் கொடுக்கத் தேவையில்லை. அதற்கான ஆதாரம் திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் இல்லை என்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு!
குர்ஆன், ஹதீஸை ஆராயாமல் ஒரு சிலரின் கூற்றைக் கேட்டு, நுனிப்புல் மேய்ந்து விட்டு, இந்த நிலைபாட்டை மக்கள் மத்தியில் நாம் எடுத்து வைக்கவில்லை.
தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம்களின் பல்வேறு அமர்வுகளுக்குப் பிறகு, தனி மனிதப் பாதிப்புகளுக்கும், தாக்கங்களுக்கும் ஆட்படாமல், அனல் பறக்கும் வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர்தான், மக்கள் மன்றத்தில் இந்தக் கருத்தை நாம் முன் வைத்தோம்.
ஏடுகள், ஒலி ஒளி நாடாக்கள் மூலமாக இந்தக் கருத்தை மக்கள் மன்றத்தில் வைக்கும் போது, அதன் எதிர் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை நாம் மதிப்பீடு செய்யத் தவறவில்லை.
எதிர்பார்த்தபடியே மாற்றுக் கருத்துடையவர்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, தனி மனித வழிபாடு, வழிகேடு என்ற விமர்சனங்களுடன் நின்று விடாமல், இறை மறுப்பு என்ற மார்க்கத் தீர்ப்புகளும் வெளியிட்டனர்.
இவற்றைப் பொருட்படுத்தாது, திறந்த மனதுடன், திறந்த விவாதத்திற்கு நாம் அழைப்பு விடுத்து வந்தோம். நம்மை நேரடியாகக் களத்தில் சந்திக்கத் தயங்கியவர்கள், ஒரு மாத இதழில், நூர் முஹம்மத் பாக்கவி மீது சவாரி செய்து நமக்கு ஜவாப் (?) சொல்லியிருந்தார்கள்.
அதற்கும் வரிக்கு வரி ஏகத்துவம் இதழில் பதில் அளித்தோம். அத்துடன் நின்று விடாமல் நம்முடைய விவாத அழைப்பைத் தொடர்ந்து விடுத்துக் கொண்டே இருந்தோம். அதனுடைய ஓர் இறுதி வடிவம்தான் 10.02.07 மற்றும் 11.02.07 ஆகிய இரு திகதிகளில் மதுரையில் நூர் முஹம்மது பாக்கவியுடன் நடைபெற்ற விவாதம்.
'
ஸகாத்' கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு நூர் முஹம்மத் பாக்கவி சரியான ஒரு சான்றை இந்த விவாதத்தில் எடுத்து வைப்பார் என்று காத்திருந்தோம்.
ஆனால், ஒரு ஆதாரத்தைக் கூட எடுத்து வைக்காதது மட்டுமல்ல! தன்னுடைய நூலில் பலவீனமான ஹதீஸ் என்று ஒப்புக் கொண்ட ஹதீஸை விவாதத்தின் போது, பலமான ஹதீஸ் என்று அந்தர் பல்;டி அடித்தார்.
முதல் நாள் நடைப்பெற்ற விவாதத்திலும் சரியான சான்றுகளை எடுத்து வைக்கவில்லை. அடுத்த நாள் நடைபெற்ற பார்வையாளர்கள் கேள்வியின் போதாவது, ஏதேனும் சான்றை எடுத்துக் கூறுவார் என்று இரு தரப்பில் உள்ளவர்களும் எதிர்பார்த்தனர்.
நூர் முஹம்மது பாக்கவி தரப்பில் பார்வையாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள் கூட, 'சர்ச்சைக்குரிய இந்த ஹதீஸை விட்டு விட்டு, வேறு வலுவான ஒரு சான்றைத் தூக்கிப் போடுங்கள்ளூ பிரச்சினை முடிந்து விடும்' என்று கேள்வி நேரத்தில் கேட்டனர். அதற்கும் அவர், இந்த ஹதீஸ்தான் என்று பழைய பாட்டையே பாடினார்.
இவர்களிடம் விஷயம் எதுவும் இல்லை என்பது இவர்களுடைய ஆதரவாளர்களுக்கே பளிச்சென்று தெரிந்தது.
இதுதான்  மதுரை விவாதத்தின் போது, நிரூபணமான உண்மை!
இன்னும் சொல்லப் போனால், ஸகாத் குறித்த நமது நிலைப்பாட்டை வெளியிடுவதற்கு முன்னால், அது குறித்த ஆய்வு செய்வதற்காக தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் நடத்திய பல்வேறு அமர்வுகளில் எழுப்பப்பட்ட வாதங்கள், கேள்விகள் கூட இந்த மதுரை விவாதத்தின் போது எழுப்பப்படவில்லை.
இதன் மூலம் ஸகாத் விஷயத்தில் நமது நிலைபாடு மிகச் சரியானது என்பது நன்கு உறுதியாகி உள்ளது.
இந்த நிலைப்பாட்டிற்கு எதிராகப் பிரசாரம் செய்தவர்களிடம் பண்டமில்லைளூ அதனால், பதிலும் இல்லை. இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. இந்த அளவுகோலை எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையிலேயே குறிப்பிடுகின்றான்.
அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால், அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர் வழியின்றி, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 28:48-50)
மனோ இச்சைகளைப் பின்பற்றும் இவர்களிடம் என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்? இருப்பினும், இவர்களிடம் இன்னும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் நிலைப்பாட்டிற்கு மாற்றமாக ஒரேயொரு ஆதாப்பூர்வமான நபிமொழியை எடுத்து வைத்து விட்டால், அதற்குப் பிறகும் முயலுக்கு மூன்று கால் என்று நிற்க மாட்டோம்.
சுய கவுரவத்தைச் சுருட்டி எறிந்து விட்டு, சத்தியக் கருத்தைப் பின்பற்றக் கடுகளவும் தயங்க மாட்டோம் என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்.
05.08.2009. 04:31


0 comments:

Post a Comment