நபி (ஸல்) அவர்கள் இரமலான் மாதம் முழுவதும் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.
இரமலானில் சில
நாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் ஜமாஅத்தாக நிறைவேற்றியும் உள்ளார்கள். கடமையாகிவிடுமோ
என்ற அச்சத்தின் காரணமாகவே அவர்கள் ஜமாஅத்தாக நிறைவேற்றவில்லை. நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப்
பிறகு யாரும் மார்க்கத்தில் எதையும் கடமையாக்கிவிட முடியாது. எனவே நாம் இரமலான் முழுவதும்
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளலாம்.
இரமலான் அல்லாத
பிற காலங்களில் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதில் தவறில்லை. ஆனால் அதை வழமையாகச்
செய்வது கூடாது. இதை நாம் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (1/
40(
117- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ قَالَ : حَدَّثَنَا الْحَكَمُ
قَالَ : سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ بِتُّ فِي بَيْتِ
خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ زَوْجِ النَّبِيِّ : وَكَانَ النَّبِيُّ صلى
الله عليه وسلم عِنْدَهَا فِي لَيْلَتِهَا فَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم
الْعِشَاءَ ثُمَّ جَاءَ إِلَى مَنْزِلِهِ فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ ثُمَّ نَامَ
ثُمَّ قَامَ ثُمَّ قَالَ نَامَ الْغُلَيِّمُ ، أَوْ كَلِمَةً تُشْبِهُهَا ثُمَّ قَامَ
فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ ثُمَّ
صَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ نَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ ، أَوْ خَطِيطَهُ ، ثُمَّ
خَرَجَ إِلَى الصَّلاَةِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர் களின் துணைவியாருமான
மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் நான் தங்கினேன். மைமூனா
(ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபி (ஸல்) அவர்களும் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்)
அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுவித்து விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு
ரகஅத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து சின்னப் பையன் தூங்கிவிட்டானா? அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச்
சொல்லிவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள். உடனே நான் எழுந்து (அவர்களுடன்) அவர்களுக்கு
இடப் பக்கத்தில் போய் நின்று கொண்டேன். உடனே (தொழுது கொண்டி ருக்கும்போதே) என்னை இழுத்து
தம் வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு (முதலில்) ஐந்து ரக்அத்களும் பின்னர் இரண்டு ரக்அத்களும்
தொழுதுவிட்டு, அவர்களின் குறட்டை சப்தத்தை
நான் கேட்குமளவுக்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். பிறகு (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டுச்
சென்றார்கள்.
நூல் : புகாரி (117)
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 64)
1135- حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ
حَرْبٍ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي وَائِلٍ ، عَنْ
عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله
عليه وسلم لَيْلَةً فَلَمْ يَزَلْ قَائِمًا حَتَّى هَمَمْتُ بِأَمْرِ سَوْءٍ قُلْنَا
وَمَا هَمَمْتَ قَالَ هَمَمْتَ أَنْ أَقْعُدَ وَأَذَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم.
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஓர் இரவில் நபி (ஸல்) அவர்களுடன் (இரவுத்
தொழுகை) தொழுதேன். அவர்கள் (நீண்டநேரம் நிலையில்) நின்று கொண்டே இருந்தார்கள். நான்
ஒரு தவறான ஒரு முடிவுக்குக் கூட சென்றுவிட்டேன் (அந்த அளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள்) என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
(ரலி) கூறினார்கள். நான், அந்தத் தவறான முடிவு எது? என்று
கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் தொழுவதை
விட்டுவிட்டு உட்கார்ந்துவிடலாம்' என்று எண்ணினேன் என விடையளித்தார்கள்.
(நூல் : புகாரி 1135)
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (2/ 186)
1850 - وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ
أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ وَأَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا
زُهَيْرُ بْنُ حَرْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ جَرِيرٍ كُلُّهُمْ
عَنِ الأَعْمَشِ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا أَبِى
حَدَّثَنَا الأَعْمَشُ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ الأَحْنَفِ
عَنْ صِلَةَ بْنِ زُفَرَ عَنْ حُذَيْفَةَ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِىِّ -صلى الله
عليه وسلم- ذَاتَ لَيْلَةٍ فَافْتَتَحَ الْبَقَرَةَ فَقُلْتُ يَرْكَعُ عِنْدَ الْمِائَةِ.
ثُمَّ مَضَى فَقُلْتُ يُصَلِّى بِهَا فِى رَكْعَةٍ فَمَضَى فَقُلْتُ يَرْكَعُ بِهَا.
ثُمَّ افْتَتَحَ النِّسَاءَ فَقَرَأَهَا ثُمَّ افْتَتَحَ آلَ عِمْرَانَ فَقَرَأَهَا
يَقْرَأُ مُتَرَسِّلاً إِذَا مَرَّ بِآيَةٍ فِيهَا تَسْبِيحٌ سَبَّحَ وَإِذَا مَرَّ
بِسُؤَالٍ سَأَلَ وَإِذَا مَرَّ بِتَعَوُّذٍ تَعَوَّذَ ثُمَّ رَكَعَ فَجَعَلَ يَقُولُ
« سُبْحَانَ رَبِّىَ الْعَظِيمِ ». فَكَانَ رُكُوعُهُ نَحْوًا مِنْ قِيَامِهِ ثُمَّ
قَالَ « سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ». ثُمَّ قَامَ طَوِيلاً قَرِيبًا مِمَّا رَكَعَ
ثُمَّ سَجَدَ فَقَالَ « سُبْحَانَ رَبِّىَ الأَعْلَى ». فَكَانَ سُجُودُهُ قَرِيبًا
مِنْ قِيَامِهِ. قَالَ وَفِى حَدِيثِ جَرِيرٍ مِنَ الزِّيَادَةِ فَقَالَ « سَمِعَ اللَّهُ
لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ ».
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (தஹஜ்ஜுத்)
தொழுதேன். அதில் அவர்கள் "அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயத்தை
ஓத ஆரம்பித்தார்கள். நான் "அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்' என்று
எண்ணினேன். ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த
பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள். நான் "அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து
ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்துவிடுவார்கள்' என்று
எண்ணினேன். ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள். நான் "அவர்கள்
அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்' என்று
எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) "அந்நிசா' எனும்
(4ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து
ஓதினார்கள்; பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது)
அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது
பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும்போது (ஒதுவதை நிறுத்திவிட்டு), (சுப்ஹானல்லாஹ்
- அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை)
வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு), (இறையருளை)
வேண்டினார்கள். (இறை தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை
ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள்.
பிறகு ருகூஉச் செய்தார்கள். அவர்கள் ருகூவில்
"சுப்ஹான ரப்பியல் அழீம்' (மகத்துவ மிக்க என் இறைவன் தூயவன்)
என்று கூறலானார்கள். அவர்கள் நிலையில் நின்ற அளவுக்கு ருகூஉச் செய்தார்கள். பின்னர்
(ருகூவிலிருந்து நிமிரும்போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' (அல்லாஹ்
தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறிவிட்டுக் கிட்டத்தட்ட ருகூஉச்
செய்த அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றிருந்தார்கள். பிறகு சஜ்தாச் செய்தார்கள்.
அதில் "சுப்ஹான ரப்பியல் அஃலா' (மிக்க மேலான என் இறைவன் தூயவன்)
என்று கூறினார்கள். அவர்கள் நிலையில் நின்றிருந்த அளவுக்கு சஜ்தாச் செய்தார்கள்.
(நூல்
: முஸ்லிம் 1421)
மேலே நாம்
குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் அனைத்தும் வழமையாக இல்லாமல் எப்போதாவது இரவுத்
தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளலாம் என்பதற்குரிய ஆதாரங்களாகும்.
வாரந்தோரும், அல்லது மாதந்தோரும் குறிப்பிட்ட நாட்களில் வழமையாக ஜமாஅத்தாக இரவுத்
தொழுகையை நிறைவேற்றுவது பித்அத் ஆகும். அது போன்று ஆசூரா , அரஃபா போன்ற
குறிப்பிட்ட இரவுகளில் மக்களை அழைப்பு விடுத்து ஜமாஅத்தாகத் தொழுவதும் பித்அத்
ஆகும்.
ஆனால் வழமையாக
இல்லாமல் ஏதாவது ஒரு நாளில் அல்லது சில நாட்களில் இரவுத் தொழுகையை மக்களுக்கு
நினைவூட்டி ஆர்வமூட்டும் வகையில் ஜமாஅத்தாகத் தொழுதால் அது பித்அத் ஆகாது.
0 comments:
Post a Comment