29 March 2024

 லைலத்துல் கத்ரின் சிறப்பும், தேட வேண்டிய இரவுகளும், செய்ய வேண்டிய அமல்களும்.


லைலத்துல் கத்ர் இரவுகளிலேயே மிகச் சிறப்பு மிக்கதாகும். அந்த இரவில்தான் அல்லாஹ் திருமறைக் குர்ஆனை அருளினான். அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. அந்த இரவு பரக்கத் மிகுந்ததாகும். அந்த இரவில்தான் வானவர்கள் இறைவனின் ஆணைப்படி செயல் திட்டத்துடன் இறங்குகின்றனர். அந்த இரவு அமைதி நிறைந்த இரவாகும்.


அல்லாஹ் கூறுகிறான் :

بسم الله الرحمن الرحيم

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (1) وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (2) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (3) تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ (4) سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ (5) سورة القدر

 

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

1. இ(வ் வேதத்)தை மதிப்புமிக்க இரவில் இறக்கினோம். 2. மதிப்புமிக்க இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?  3. மதிப்புமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்.  4. அதில் வானவர்களும், (ஜிப்ரீல் எனும்) ரூஹூம் தமது இறைவனின் ஆணைப்படி ஒவ்வொரு செயல்திட்டத்துடன் இறங்குகின்றனர்.  5. அமைதி (நிறைந்த இரவு). அது, அதிகாலை உதயமாகும்வரை இருக்கும்.

அல்குர்ஆன் அத்தியாயம் 97

 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا حَضَرَ رَمَضَانُ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قَدْ جَاءَكُمْ رَمَضَانُ، شَهْرٌ مُبَارَكٌ، افْتَرَضَ اللهُ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ الْجَنَّةِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ الشَّيَاطِينُ، فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا، فَقَدْ حُرِمَ "(رواه أحمد 7148)

இரமலான் மாதம் வந்த போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மக்களே!) இரமலான் உங்களிடம் வந்துவிட்டது. அது பாக்கியம் நிறைந்த மாதமாகும். அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில்தான் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகிறது. அதில்தான் நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகிறது. அதில்தான் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். அம்மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும். அதனுடைய நன்மை யாருக்குத் தடுக்கப்படுகிறதோ அவர் (பெரும் பாக்கியங்கள்) தடுக்கப்பட்டவராவார்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மத் (7148)

 

லைலத்துல் கத்ர் இரவு பரக்கத் (பாக்கியம்) நிறைந்தது.

وَالْكِتَابِ الْمُبِينِ (2) إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (3) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ (4) أَمْرًا مِنْ عِنْدِنَا إِنَّا كُنَّا مُرْسِلِينَ (5) رَحْمَةً مِنْ رَبِّكَ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (6)44

தெளிவான இவ்வேதத்தின்மீது சத்தியமாக!  பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் இதை இறக்கினோம். நாம் எச்சரிக்கை செய்வோராக இருக்கிறோம்.  அதில்தான் உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு செயல்திட்டமும் பிரிக்கப்படுகின்றது நமது ஆணைப்படியே (பிரிக்கப்படுகிறது.) நாம் தூதர்களை அனுப்புவோராக இருந்தோம். (இது) உமது இறைவனின் அருளாகும். அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 44 : 2 -6)

 

லைலத்துல் கத்ர் இரவில் தொழுவதின் சிறப்பு

عن أبي هُرَيرةَ رضِيَ اللهُ عنهُ عنِ النبيِّ صلَّى الله عليه وسلَّمَ أنَّه قال: ((مَن  يَقُمْ  ليلةَ  القَدْرِ إيمانًا  واحتسابًا، غُفِرَ له ما تَقدَّمَ من ذَنبِه)).  رواه البخاريُّ (35)، ومسلم (760(

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்:  புகாரி (35)


லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ

عن عائشة قالت قلت : يا رسول الله أرأيت إن وافقت ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني (سنن النسائي الكبرى 10713)

அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ருடன் நான் ஒன்றுபட்டால் அதில் நான் என்ன கூற வேண்டும் எனத் தாங்கள் எனக்குக் கூறுங்கள்என்று நான் (நபியவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள்

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன். துஹிப்புல் அஃப்வ. FபஃFபு அன்னீ

என்று கூறுவாயாக! என்றார்கள்.

பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மாபெரும் மன்னிப்பாளன். மன்னிப்பதையே நீ விரும்புகிறாய். எனவே, என்னை மன்னித்தருள்வாயாக!

நூல் : நஸாயீ அல்குப்ரா (10713)


லைலத்துல் கத்ர் இரவைத் தேடி இரமலானின் கடைசி பத்து நாட்களும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட இறைத்தூதர்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ (رواه البخاري 2024)

(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!

 

அறிவிப்பவர்  : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (2024)



லைலத்துல் கத்ர் இரவு எப்போது ?

லைலத்துல் கத்ர் இரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் உள்ளது என்பது தொடர்பாக வரும் நபிமொழிகள்

1

عن عائشةَ رضِيَ اللهُ عنها قالتْ: كان رسولُ الله صلَّى الله عليه وسلَّمَ يُجاوِر في العَشْر الأواخِر من رمضانَ، ويقول: ((تَحرَّوا ليلةَ القَدْر في العَشْر الأواخِر من رمضانَ))  رواه البخاريُّ (2020)،

 நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்: ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்! என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (2020)

2

عن أبي هُرَيرَةَ رضِيَ اللهُ عنهُ : أنَّ رسولَ الله صلَّى الله عليه وسلَّمَ قال: ((أُريتُ  ليلَةَ  القدْرِ، ثُمَّ أيقظَنِي بعضُ أهلِي فنُسِّيتُها؛ فالْتَمِسوها في العَشرِ الغَوابِرِ))  رواه مسلم2167

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில்) "லைலத்துல் கத்ர்' இரவு எனக்குக் காட்டப்பெற்றது. பின்னர் என் வீட்டாரில் ஒருவர் என்னை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தபோது, அதை நான் மறக்கவைக்கப்பட்டேன். ஆகவே, (ரமளானின்) இறுதிப் பத்து இரவு களில் (ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்.

 

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (2167)

 

3

عن عبدالله بن عُمرَ رضِيَ اللهُ عنهُما قال: سمعتُ رسولَ الله صلَّى الله عليه وسلَّمَ يقول لليلةِ القَدْر: ((إنَّ ناسًا منكم قدْ أُرُوا أنَّها في السَّبع الأُوَل، وأُرِي ناسٌ منكم أنَّها في السَّبع الغَوابِر؛ فالْتمِسوها في العَشْر الغَوابِرِ))  رواه مسلم 2163

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லைலத்துல் கத்ர்' இரவு தொடர்பாகக் கூறுகையில், "உங்களில் சிலர், (கனவில்) ரமளானின் முந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்' இரவு இருப்பதாகக் காட்டப் பெற்றனர்; உங்களில் வேறுசிலர் (கனவில்) ரமளானின் பிந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்' இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர். ஆகவே, நீங்கள் ரமளானின் பிந்தைய பத்தில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : முஸ்லிம் (2163)

 

4

عن عبدالله بن عُمرَ رضِيَ اللهُ عنهُما قال: قال رسولُ الله صلَّى الله عليه وسلَّمَ: ((تَحَيَّنوا  ليلةَ  القَدْرِ  في العَشْرِ الأواخرِ - أو قال: في التِّسعِ الأواخِرِ))  رواه مسلم 2166

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்' இரவைத் தேடிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : முஸ்லிம் (2166)

 

இரமலானில் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப் படை இரவுகளில் தேடுமாறு வந்துள்ள நபிமொழிகள்

1

عَنْ أَبِي سَلَمَةَ قَالَ انْطَلَقْتُ إِلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فَقُلْتُ أَلاَ تَخْرُجُ بِنَا إِلَى النَّخْلِ نَتَحَدَّثْ فَخَرَجَ فَقَالَ قُلْتُ حَدِّثْنِي مَا سَمِعْتَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي لَيْلَةِ الْقَدْرِ قَالَ اعْتَكَفَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَشْرَ الأُوَلِ مِنْ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَاعْتَكَفَ الْعَشْرَ الأَوْسَطَ فَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلْيَرْجِعْ فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نُسِّيتُهَا وَإِنَّهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ فِي وِتْرٍ وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ ، وَكَانَ سَقْفُ الْمَسْجِدِ جَرِيدَ النَّخْلِ وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا فَجَاءَتْ قَزْعَةٌ فَأُمْطِرْنَا فَصَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالْمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَأَرْنَبَتِهِ تَصْدِيقَ رُؤْيَاهُ (رواه البخاري 813)

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் இஃதிகாஃப்' இருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, நீங்கள் தேடக் கூடிய (லைலத்துல் கத்ர் ஆன)து உங்களுக்கு எதிர் வரும் (நாட்களில் உள்ளது என்றார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள் நடுப்பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நீங்கள் தேடக்கூடியது உங்களுக்கு எதிர் வரும் (நாட்களில் உள்ளது) என்று கூறினார்கள்.

ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:

யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் (பள்ளிவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கடிக்கப்ட்டுவிட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாளில் உள்ளது. நான் ஈரமான களி மண்ணில் சஜ்தாச் செய்வது போன்று கனவு கண்டேன். (அன்று மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் கூரை, பேரீச்ச மட்டையினால் வேயப்பட்டிருந்தது. வானத்தில் (மழைக்கான அறிகுறி) எதையும் நாங்கள் காண வில்லை. (இவ்வாறிருக்க) திடீரென ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அன்று எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நெற்றியின் மீதும் மூக்கு ஓரத்திலும் ஈரமான களிமண் படிந்திருக்கக் கண்டேன்.

 

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)

நூல் : புகாரி (813)



2

عن عائشةَ رضِيَ اللهُ عنها أنَّ رسولَ الله صلَّى الله عليه وسلَّمَ قال: ((تَحرَّوا لَيلةَ القَدْرِ في الوَتْر من العَشرِ الأواخِرِ من رمضانَ))  رواه البخاريُّ (2017(

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),  நூல் : புகாரி (2017)

 

3

عن أبي سعيدٍ الخُدريِّ رضِيَ اللهُ عنهُ قال: خطَبَنا رسولُ اللهِ صلَّى الله عليه وسلَّمَ فقال: ((إنِّي أُريتُ  ليلةَ  القَدْرِ، وإنِّي نُسِّيتُها (أو أُنسيتُها)؛ فالْتمِسوها في العَشرِ الأواخرِ من كلِّ وَترٍ)).  رواه البخاريُّ (2036)، ومسلم (1167(

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது; அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதைக் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி), நூல் : புகாரி (2036)

 

 21, 23, 25 ஆகிய இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுமாறு வந்துள்ள நபிமொழி

عن ابنِ عبَّاس رضِيَ اللهُ عنهُما أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّمَ قال: ((الْتمِسوها في العَشر الأواخِر من رمضانَ؛ لَيلةَ القَدْر في تاسعةٍ تَبقَى، في سابعةٍ تَبقَى، في خامسةٍ تَبْقَى))  رواه البخاريُّ (2021(

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (2021)

 

29, 23, ஆகிய இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுமாறு வந்துள்ள நபிமொழி

 

عن ابن عبَّاس رضِيَ اللهُ عنهُما: قال: قال رسولُ الله صلَّى الله عليه وسلَّمَ: ((هِي في العَشر، هي في تِسع يَمضِين، أو في سَبْعٍ يَبقَين))؛ يعني: ليلةَ القَدْر.  رواه البخاريُّ (2022(

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது ; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (2022)

 

29, 27, 25 ஆகிய இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுமாறு வந்துள்ள நபிமொழி

عن عُبادةَ بن الصَّامتِ قال: خرَج النبيُّ صلَّى الله عليه وسلَّمَ ليُخبِرَنا بليلةِ القَدْر، فتَلاحَى رجُلانِ من المسلمين، فقال: ((خرجتُ لأُخبِرَكم بليلةِ القَدْر، فتَلاحَى فلانٌ وفلانٌ؛ فرُفِعتْ! وعسى أنْ يكونَ خيرًا لكم؛ فالْتمِسوها في التَّاسعةِ والسَّابعةِ والخامسةِ))  رواه البخاريُّ (2023)،

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லீம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர்: எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்!. எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்! எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் : உப்பாதா இப்னு ஸாமித் (ரலி)

நூல் : புகாரி (2023)

 

இரமலான் இறுதி ஏழு நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு வந்துள்ள நபிமொழிகள்

1

عن عبداللهِ بن عُمرَ رضِيَ اللهُ عنهُما قال: قال رسولُ الله صلَّى الله عليه وسلَّمَ: ((الْتمِسوها في العَشرِ الأواخِرِ - يعْنِي:  ليلَةَ  القدْرِ -  فإنْ ضَعُفَ أحدُكم أوْ عَجَزَ، فلا يُغْلَبَنَّ علَى السَّبْعِ البواقِي))  رواه مسلم2164

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் அந்த (லைலத்துல் கத்ர்) இரவை (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடிக்கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்குப் பலவீனம், அல்லது இயலாமை ஏற்பட்டால், எஞ்சிய (இறுதி) ஏழு இரவுகளில் (ஒன்றிலாவது அதைத் தேடும் முயற்சியில்) தளர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுவிட வேண்டாம்.

 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : முஸ்லிம் (2164)

 

2

عن ابن عُمرَ رضِيَ اللهُ عنهُ أنَّ أُناسًا أُرُوا ليلةَ القَدْر في السَّبع الأواخِر، وأنَّ أُناسًا أُرُوا أنَّها في العَشر الأواخِر، فقال النبيُّ صلَّى الله عليه وسلَّمَ: ((الْتَمِسوها في السَّبع الأواخِرِ))  رواه البخاريُّ (6991) واللَّفظ له، ومسلم

 (நபித்தோழர்களில்) சிலருக்கு லைலத்துல் கத்ர்' (எனும் மகத்துவமிக்க) இரவு (ரமளான் மாதத்தில்) கடைசி ஏழுநாட்களில் இருப்ப தாகக் கனவில் காட்டப்பட்டது. இன்னும் சிலருக்கு அது (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் இருப்பதாகக் கனவில் காட்டப் பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், அதைக் கடைசி ஏழு நாட்களில் தேடிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி  (6991)


 3

عن ابن عُمرَ رضِيَ اللهُ عنهُما عن النبيِّ صلَّى الله عليه وسلَّمَ قال: ((تَحرَّوا  ليلَةَ  القَدْرِ  في السَّبْعِ الأواخِرِ))  رواه مسلم

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"லைலத்துல் கத்ர்' இரவை (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் (ஒன்றில்) தேடிக் கொள்ளுங்கள்.

 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : முஸ்லிம் (2161)

4

عن ابن عُمرَ رضِيَ اللهُ عنهُما، أنَّ رِجالًا من أصحاب النبيِّ صلَّى الله عليه وسلَّمَ أُرُوا ليلةَ القَدْر في المنامِ في السَّبع الأواخِر، فقال رسولُ الله صلَّى الله عليه وسلَّمَ: ((أَرَى رُؤياكم قد تَواطأتْ في السَّبع الأواخِر؛ فمَن كان مُتحرِّيَها، فلْيَتحرَّها في السَّبع الأواخِر))  رواه البخاريُّ (2015)، ومسلم

நபித் தோழர்கள் சிலர் கண்ட கனவில், (ரமளானின்) கடைசி ஏழு (இரவு)களில் ஒன்றில் லைலத்துல் கத்ர்' எனும் கண்ணியமிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கடைசி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதனைத் தேடுபவர் (ரமளானின்) கடைசி ஏழு(இரவு)களில் தேடிக்கொள்ளட்டும்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (2015)



23 வது இரவு லைலத்துல் கத்ர் என்று வரும் ஹதீஸ்

عن عبداللهِ بن أُنيسٍ رضِيَ اللهُ عنهُ أنَّ رسولَ الله صلَّى الله عليه وسلَّمَ قال: ((أُريتُ ليلةَ القَدْر، ثمَّ أُنسيتُها، وأَراني صُبحَها أسجُدُ في ماءٍ وطِينٍ))، قال: فمُطِرْنا ليلةَ ثلاثٍ وعِشرين، فصلَّى بنا رسولُ الله صلَّى الله عليه وسلَّمَ فانصرَف، وإنَّ أثَرَ الماء والطِّين على جَبهته وأنفِه. قال: وكان عبدالله بن أُنيسٍ يقول: ثلاث وعِشرين.  رواه مسلم 2173

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லைலத்துல் கத்ர் (எந்த இரவு என்பது) பற்றி எனக்குக் கனவில் காட்டப்பெற்றது. பின்னர் அதை மறக்கவும் செய்யப்பட்டேன். அன்று காலை நான் தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்'' என்று கூறினார்கள். இருபத்து மூன்றாவது நாள் இரவில் மழை பெய்தது. (அன்று காலையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (சுப்ஹுத் தொழுகை) தொழுவித்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது தண்ணீர் மற்றும் களிமண்ணின் அடையாளம் அவர்களது நெற்றியிலும் மூக்கிலும் படிந்திருந்தது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (2173)

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُمْ وَسَأَلُوهُ عَنْ لَيْلَةٍ يَتَرَاءَوْنَهَا فِي رَمَضَانَ قَالَ لَيْلَةُ ثَلَاثٍ وَعِشْرِينَ (رواه أحمد)

ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி)

நூல்: அஹ்மத் (15466)

 

27 வது இரவு லைலத்துல் கத்ர் என்று வரும் ஹதீஸ்

عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةِ الْقَدْرِ قَالَ لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ (رواه أبو داود)

இருபத்தேழாவது இரவு தான் லைலத்துல் கத்ர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  முஆவியா (ரலி)

நூல்: அபூதாவூத் (1178)

 



 27 வது இரவு லைலத்துல் கத்ர் என்று வரும் செய்தி. இது உபை இப்னு கஅப் (ரலி) அவர்களின் கருத்தாகும்.

 

قال أُبيُّ بنُ كَعبٍ رضِيَ اللهُ عنهُ في  لَيلةِ  القَدْرِ: ((واللهِ، إنِّي لأَعلمُها، وأكثرُ عِلمي هي اللَّيلةُ التي أَمرَنا رسولُ اللهِ صلَّى الله عليه وسلَّمَ بقِيامِها، هي ليلةُ سَبعٍ وعِشرينَ))  رواه مسلم

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அந்த இரவைப் பற்றி நான் அறிவேன். அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; அது (ரமளானின்) இருபத்தி ஏழாம் இரவேயாகும் என்றே அநேகமாக நான் கருதுகிறேன்.

நூல் : முஸ்லிம் (1398)

 

லைலத்துல் கத்ர் இரவின் அடையாளங்கள் தொடர்பாக வந்துள்ள நபிமொழிகள்

 

عن أبي هُرَيرَةَ رضِيَ اللهُ عنهُ قال: تَذاكَرْنا  ليلةَ  القَدْرِ  عند رسولِ اللهِ صلَّى الله عليه وسلَّمَ. فقال: ((أيُّكم يَذكُرُ حين طلَع القمرُ وهو مِثلُ شِقِّ جَفْنَةٍ))؟  رواه مسلم 2177

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் "லைலத்துல் கத்ர்' இரவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "உணவுத் தட்டின் பாதித் துண்டைப் போன்று நிலா தோன்றும் இரவே (லைலத்துல் கத்ர்) ஆகும் என்பதை உங்களில் நினைவில் கொள்பவர் யார்?'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (2177)

 

زِرَّ بْنَ حُبَيْشٍ يَقُولُ سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقُلْتُ إِنَّ أَخَاكَ ابْنَ مَسْعُودٍ يَقُولُ مَنْ يَقُمْ الْحَوْلَ يُصِبْ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ رَحِمَهُ اللَّهُ أَرَادَ أَنْ لَا يَتَّكِلَ النَّاسُ أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ وَأَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَأَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ثُمَّ حَلَفَ لَا يَسْتَثْنِي أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ فَقُلْتُ بِأَيِّ شَيْءٍ تَقُولُ ذَلِكَ يَا أَبَا الْمُنْذِرِ قَالَ بِالْعَلَامَةِ أَوْ بِالْآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لَا شُعَاعَ لَهَا    رواه مسلم

ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர் கள் கூறியதாவது:

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களி டம், "தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் "வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்' என்று கூறுகிறாரே?'' என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! மக்கள் (மற்ற நாட்களில் வழி பாடுகளில் ஈடுபடாமல்) அசட்டு நம்பிக்கை யோடு இருந்துவிடக் கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இருபத்தேழாவது இரவுதான் என்பதை இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்'' என்று பதிலளித் தார்கள். பிறகு "அல்லாஹ் நாடினால்' என்று கூறாமல் "அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்' என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். நான், "அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் "அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்' என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)'' என்றார்கள்.

நூல் : முஸ்லிம் (2175)

 

குறிப்பு : இச்செய்தியில் அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்என்பது மட்டுமே நபி (ஸல்) அவர்களின் கூற்றாகும். அதை வைத்து 27 ஆம் இரவு என தீர்மானித்தது உபை இப்னு கஅப் (ரலி) அவர்களின் இஜ்திஹாத் (ஆய்வு) ஆகும்.



சுருக்கம் :

 

ஸஹீஹான ஆதாரப் பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் லைலத்துல் கத்ர் இரவை நபியவர்கள் எவ்வாறு தேடியுள்ளதாக வந்துள்ளதோ அவ்வாறு நாம் தேடினால் மட்டுமே லைலத்துல் கத்ர் எனும் மாபெரும் பாக்கியமிக்க இரவை நாம் அடைந்து கொள்ள இயலும்.


குறிப்பிட்ட ஓர் இரவு மட்டும்தான் லைலத்துல் கத்ர் என்று உறுதிப் படுத்தி வரையறுத்து கூற முடியாது.

 

 இறைநம்பிக்கையாளர்கள் கடைசிப் பத்து நாட்களும் நின்று வணங்கி, இறைவனிடம் பிராரத்தனை செய்து ஏராளமான பாக்கியங்களை அடைந்து கொள்ள வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருக்கலாம். எனவே 27 வது இரவுதான் லைலத்துல் கத்ர் என்று உறுதி செய்பவர்கள் மிகப் பெரும் இழப்பிற்கு உள்ளாக நேரிட்டு விடலாம்.

 

லைலத்துல் கத்ர் இரவைத் தேடி இறைத்தூதர் காட்டித் தந்த பிரகாரம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். பித்அத்தான காரியங்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். இரமலான் கடைசிப் பத்து இரவுகளில் வரம்பு மீறிய செயல்பாடுகளிலும், கேளிக்கைகளிலும் ஈடுபடாமல் இறையச்சத்துடன் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த மாபெரும் பாக்கியத்தை அடைவோமாக!



 

0 comments:

Post a Comment