22 June 2011

இவர்கள் தான் காதியானி மதத்தினர்

இவர்கள் தான் காதியானி மதத்தினர்
முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33 : 40)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி) நூல் : திர்மிதி (2145)
 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்கüன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, "இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டி ருக்கக் கூடாதா?'' என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்கüல் இறுதியானவன்.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3535)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்: 1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன். 2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. 3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. 4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிட மாகவும் ஆக்கப்பட்டுள்ளது. 5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன். 6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலிலி) நூல் : முஸ்லிம் (907)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தூதுத்துவமும் நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டது. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை நபியும் இல்லை. (நபியவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. உடனே நபியவர்கள்  என்றாலும் நற்செய்திகள் (எஞ்சியுள்ளது) என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே (முபஸ்ஸராத்) நற்செய்திகள் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி (2198)

ஜுபைர் பின் முத்இம் (ரலிலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் "முஹம்மத்' (புகழப்பட்டவர்) ஆவேன். நான் "அஹ்மத்' (இறைவனை அதிகமாகப் புகழ் பவர்) ஆவேன். நான் "மாஹீ' (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறை மறுப்பை அழிக்கின்றான். நான் "ஹாஷிர்' (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் "ஆகிப்' (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.

நூல் :   முஸ்லிம் (4697)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                                                       நூல் : புகாரி (3455)

சஅத் பின் அபீவக்காஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலிலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலிலி) அவர்கள், "குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை'' என்று சொன்னார்கள்.                                          (நூல் : முஸ்லிம் 4777)

மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்கள் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி. அவர்களுக்குப் பின் எந்த நபியும், எந்த ரசூலும் வரமாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறுகின்றன. இறுதி நபியாகிய முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் நபி என்று வாதிடக் கூடிய பொய்யர்கள் தோன்றுவார்கள் என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்ததை மெய்பிக்கும் வகையில் தன்னை நபி என்று வாதிக்கும் பொய்யர்களில் ஒருவர்தான் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்பவனாவான். இவன் இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் காதியான் என்ற ஊரில் பிறந்தான்.

யூதர்கள் எதிர் பார்க்கும் மஸீஹ், கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கும் மெஸய்யா, முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் மஹ்தி, ஈஸா (அலை), இந்துக்கள் எதிர்பார்க்கும் கல்கி அவதாரம் ஆகிய அனைத்தும் நான்தான் என்று இந்த பொய்யன் உளறினான்.

இவனுடைய இந்த உளறினால் இவன் பொய்யன் என்பதை அறிந்து கொண்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் யாரும் இவனை ஏறிட்டும் கூட பார்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்களில் இவனுடைய பொய்களைப் பற்றி அறியாத சிலர்தான் இவனால் வழிகெடுக்கப்பட்டு வழிகேட்டில் வீழ்ந்து விட்டனர்.

முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று மக்கா காஃபிர்களிடம் எடுத்துரைத்த போது அவர்களால் நபிகள் நாயகத்தின் நபித்துவத்தை மறுக்க இயலவில்லை. அதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு முன்னும் நபித்துவத்திற்குப் பிறகும் உண்மையாளராகத் திகழ்ந்தார்கள் என்பதுதான். இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்'' எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் "ஸஃபா' மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, "பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!'' என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்üட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்) அவர்கள், "சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்க, மக்கள் "ஆம். (நம்புவோம்); உங்கüடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை'' என்று பதிலüத்தனர். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், நான் கடும் வேதனை யொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்'' என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், "நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?'' என்று கூறினான். அப்போது தான் "அபூலஹபின் கரங்கள் நாசமாகட் டும்! அவனும் நாசமாகட்டும்......'' என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது

நூல் : புகாரி (4770)

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய உண்மையை முன்னிறுத்திதான் தம்மை நபி என்று மக்களிடம் எடுத்துரைத்தார்கள்.

1891 ம் ஆண்டிலிருந்து மிர்ஸா குலாம் அஹ்மத் தன்னை நபி என்று வாதிட்டான். ஒரு நபி என்பதற்கு முக்கியமான அடையாளமே அவர் பொய்யராக இருக்க்கூடாது என்பதுதான். ஆனால் இந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவரோ மிகவும் கடைந்தெடுத்த பொய்யர்களில் ஒருவராக இருந்தார். இவர் திருமறைக்குர்ஆனில் இல்லாத வசனங்களை திருமறைக்குர்ஆனில் உள்ளதாகவும், நபி (ஸல்) அவர்கள் கூறாத ஹதீஸ்களை நபியவர்கள் கூறியதாகவும் அல்லாஹ்வின் மீதும் நபியவர்களின் மீது இட்டுக்கட்டி கூறியுள்ளான். இப்படிப்பட்ட பொய்களே இவன் பொய் நபி என்பதற்கு தெளிவான சான்றுகளாக விளங்குகின்றன.

இவன் ஏராளமான பொய்களைக் கூறியுள்ளான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இவனுடைய பொய்களுக்கு உதாரணமாக சில சான்றுகளைத் தருகின்றோம்.

மிர்சா குலாமும் முஹம்மதீ பேகம் திருமணமும்

முஹம்மதீ பேகம் என்ற பெயர் கொண்ட இன்னொருவரின் மனைவியின் மீது ஆசை கொண்ட மிர்சா குலாம் எப்படியாவது அவளை அடைந்து விட வேண்டும என்ற நோக்கத்தில் அல்லாஹ் தனக்கு முன்னறிவிப்புச் செய்திருப்பதாக பின்வரும் விசயங்களைக் கூறினான்.

முஹம்மதீ பேகத்தை நாம் உமக்கு திருமணம் செய்து வைத்ததோம் என்று அல்லாஹ் எனக்கு அறிவித்தான்.

இது ஒரு முன்னறிவிப்பு அல்ல. இதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன.

முதலாவது : அவளைத் திருமணம் செய்யும் வர நான் உயிருடன் இருப்பேன்.

இருண்டாவது : அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருப்பார்.

மூன்றாவது : எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்று வருடத்துக்குள் இறப்பார்.

நான்காவது : முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார்.



ஐந்தாவது : அப்போது நான் முஹம்மதீ பேகத்தை திருமணம் செய்வேன்.

ஆறாவது : அவளை மணப்பேண். அது வரை அவள் உயிருடன் இருப்பாள்.

இந்த ஆறு அறிவிப்புகள் நிறைவேறாவிட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்கான ஆதாரம் என்று மிர்ஸா குலாம் சொன்னான்.

இவை அனைத்தும் "ஆயினே கமாலாத்" என்ற நூலில் 325 ஆம் பக்கத்தில் மிர்சா குலாமால் எழுதப்பட்டுள்ளது.

இப்போது நாம் கேள்விக்கு வருகிறோம். ஸைனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்ததாக அல்லாஹ் கூறும் போது "ஸவ்வஜ்னாகஹா" அவரை உமக்கு மணமுடித்துத் தந்தோம் என்று கூறினான்.

அதே வார்த்தையைத் தான் அல்லாஹ் தனக்கும் பயன்படுத்தினான் என்று மிர்ஸா சொன்னான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மணமுடித்துக் கொடுத்ததாக கூறியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்யாமல் அல்லாஹ் செய்து கொடுத்த திருமணத்துடன் போதுமாக்கிக் கொண்டு வாழ்க்கை நடத்தினார்கள்.

இவ்வாறு "ஸவ்வஜ்னாகஹா" அவரை உமக்கு மணமுடித்துத் தந்தோம் என்று பொய்யன் மிர்சாவுக்கு  அல்லாஹ் கூறியிருந்தால் அது கடடாயம் நிறைவேறியிருக்க வேண்டும் ஆனால் பொய்யன் மிர்சா செத்துப் போகும் வரை அந்தப் பெண்ணை அவன் மணமுடிக்கவில்லை. இதில் இருந்து அவன் அல்லாஹ்வின் மீது பொய் கூறி விட்டான் என்பது உறுதியாகிறது. மேலும் இதுதான் நான் பொய் சொல்லவில்லை என்பதற்கு ஆதாரம் என்றும் அவன் சொன்னான். இதற்கு மிர்சாவை நபி என்று நம்புபவர்கள் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்.

சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் செத்துப் போவார் என்று பொய்யன் மிர்சா கூறினான். அவ்வாறு நடக்காவிட்டால் நான் பொய்யன் என்றும் கூறினான். ஆனால் பொய்யன் சொன்னபடி சுல்தான் முஹம்மத் சாகவில்லை. நீண்ட காலம் வாழ்ந்தார்.

நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரமாக இதை பொய்யன் குறிப்பிட்டான். இதுவும் நிறைவேறவில்லை. நபிமார்களை மெய்ப்பிக்க அல்லாஹ் வழங்கும் அத்தாட்சிகள் அப்படியே நிறைவேற வேண்டும்.

அதுவும் இது தான் நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரம் என்று பொய்யன் அறிவித்திருக்கும் போது அது நிறைவேறாமல் போகாது. இந்தக் கேள்விகள் காதியானிக் கூட்டத்தாருடன் விவாதம செய்யும் போது மூல நூலை வாசித்து கேட்கப்பட்ட கேள்விகளாகும். அதை அவர்கள் மறுக்கவில்லை.

அந்தப் பெண்ணின் தந்தை அவளுக்கு திருமணம் நடக்கும் வரை உயிருட்ன் இருந்து எனக்கு திருமணம் செய்து வைப்பார் என்று பொய்யன் மிர்சா கூறினான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை மகளுக்கு கல்யாணம செய்து வைக்காமலே மரணித்து விட்டார்.

இதிலும் மிர்சா எனும் அயோக்கியன் மாபெரும பொய்யன் என்பது உறுதியாகிவிட்டது. அல்லாஹ் எனக்குத் திருமணம் செய்து வைத்தான் என்று இந்தப் பாதகன் சொன்னானா? இல்லையா?

அல்லாஹ் அப்படி சொல்லி இருக்கும் போது அது போல் நடந்ததா? இது நிறைவேறா விட்;டால் அவன் பொய்யன். இது நிறைவேறி இருந்தால் அவன் பொய்யன் அல்ல.

சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார் என்று இந்த அயோக்கியன் சொன்னானா இல்லையா. அவன் அப்படி சொன்னால் அதன் படி நடந்ததா? நடந்தது என்றால் அவன் உண்மை சொன்னான். நடக்கவில்லை என்றால் அவன் பொய் சொன்னான்.

அவளுடைய தந்தை தன் மகளை எனக்கு மணமுடித்து தந்து விட்டு மரணிப்பார் என்ற இவன் சொன்னானா இல்லையா. சொன்னான் என்றால் அது நிறைவேறினால் அவன் உண்மை சொன்னான். நிறைவேறாவிட்டால் அவன் பொய் சொன்னான்.

இது காதியானி கூட்டத்துடன் நடந்த விவாதத்தில் நேருக்கு நேராகக் கேட்கப்பட்ட கேள்விகள். இப்போது நாம் கேட்கும் கேள்விகள் திடீர் கேள்விகள் அல்ல. பல வருடங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விகள். அந்த விவாதததன் போதும் அவர்கள் அதற்குப் பதல் சொலலவில்லை. இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பிறகு கூட பதில சொல்ல முடியாது.

மிர்சா குலாம் பொய்யன் தான் என்பதை அவன் ஆதாரமாகக் காட்டியவைகளை வைத்தே அல்லாஹ் அடையாளம் காட்டிவிட்டான்.

பொய்யன் மிர்சாவின் புளுகு மூட்டை

அல்லாஹ் எனக்கு நான்கு ஆண்மக்களைத தந்துள்ளான். ஐந்தாவதாக ஒரு ஆண் மகன் குறித்து அல்லாஹ் நற்செய்தி கூறினான். இது என்றாவது ஒரு நாள் நடந்தே தீரும் என்று மிர்சா கூறினான்.  (நூல் : தத்கிரா)

ஆனால் இவனுக்கு ஐந்தாவதாக ஆண் பிள்ளை பிறக்கவில்லை. தன்னைத் தானே பொய்யன் என்று இவர் நிரூபித்தான். இதன் மூலம் இவன் அல்லாஹ்வின் பெயரல் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுபவன் என்பது உறுதியாகி விட்ட பிறகு அவனைப் பொய்யன் என்று அவனது சீடர்களே உணர்ந்தார்கள். இதை மறைப்பதற்காக இவனது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது மகன் என்ற இடத்தில் கிராண்ட் சன் பேரன் என்று மாற்றிக் கொண்டார்கள்.

இது தத்கிரா என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் 265 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்படி பொய்களை விட்டடித்தவன் எப்படி உண்மையான நபியாக இருக்க முடியும் என்பதை இந்தக் காதியானி மதத்தினர் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

அல்லாஹ்வின் மீது பொய் கூறிய மிர்சா

மிர்சா குலாம் காதியானி கூறுகிறான் : இதோ இவர்தான் மூஸா அல்லாஹ்வின் இளைஞர். இவர் உயிரோடு இருப்பதாக அல்லாஹ் தன்னுடைய வேதத்திலே சுட்டிக் காட்டியுள்ளான்.  அவர் வானத்திலே உயிருடன் இருக்கிறார். அவர் மரணிக்கவில்லை. அவர் இறந்தவர்களில் இல்லை என்று நாம் நம்பிக்கை கொள்வதை நம்மீது இறைவன் விதியாக்கியுள்ளான்.

நூல் : நூருல் ஹக் பக்கம் : 68, 69

மூஸா (அலை) அவர்கள் வானத்தில் உயிருடன் இருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் எங்குமே கூறவில்லை. ஆனால் பொய்யர் மிர்சா குலாம் அஹ்மத் காதியானியோ குர்ஆனில் இல்லாத ஒன்றை குர்ஆனில் இருப்பதாக பொய்யாக இட்டுக் கட்டி கூறியுள்ளார். இதோ இத்தகைய பொய்யர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்?

(அல்குர்ஆன் 7 : 37)

முஹம்மது (ஸல்) அவர்கள் தனக்குப் பிறகு நபி என்று வாதிடும் பொய்யர்கள் தோன்றுவார்கள் என்று முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்களின் முன்னிறிவிப்பின் பிராகரம் தோன்றியவன்தான் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன். இவன் பொய்யன் என்பதை இவனது வார்த்தைகளை வைத்தே அல்லாஹ் நிரூபித்துவிட்டான். நாம் குறிப்பிட்ட விசயங்கள் தவிர இன்னும் ஏராளமான மிர்சாவின் பொய்கள் உள்ளன. தேவை ஏற்பட்டால் அவற்றை நாம் வெளியிடுவோம்.

இவனுடைய உளறல்களை சிந்தித்த உலகமக்கள் அனைவரும் இவன் பொய்யன் என்பதை அறிந்து கொண்டார்கள். தற்போது உள்ள காதியானி மதத்தினரும் இவனின் பொய்களை உணர்ந்து அவற்றை சிந்தித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி, அவர்களுக்குப் பின் வேறு நபியோ, ரசூலோ வரமுடியாது என்று சத்தியக் கொள்கையின் பக்கம் திரும்பும் நல்வாய்ப்பை அல்லாஹ் வழங்குவானாக. 

18 comments:

jafarla said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

//முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33 : 40)//
காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு நபிமார்களுக்கெல்லாம் இறுதியானவர் என்று தவறாகப் பொருள் கொடுக்கப்படுகின்றது. ஆனால் அது திருமறையில் காணப்படும் போதனைகளுக்கும் அரபு அகராதிகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட கருத்தாகும்.

காத்தம் என்ற சொல்லுக்கு அரபு நோழியில் இறுதியானவர் (கடைசியானவர்) என்ற பொருளே இல்லை. அதாவது 'காதம்' என்ற சொல், ஒரு பன்மைச் சொல்லுடன் இணைந்து வரும்போது அதாவது ஒரு கூட்டத்துடன் சேர்த்து பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம், அந்தக் கூட்டத்தில் சிறந்தவர், அந்தக் கூட்டத்தில் பரிபூரணத் தன்மையைப் பெற்றவர் என்ற பொருள் மட்டும்தான் இருக்கிறது.

இந்தச் சொல் நபிகள் நாயகத்தின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுவதற்க்காகத்தான் கூறப்பட்டிருக்கிறது. ஒருவர் ஒரு கூட்டத்திற்கு இறுதியாகவும், கடைசியாகவும் வருவதால் அவருக்கு எந்தவிதமான சிறப்பும் கிடைப்பதில்லை. ஹஸ்ரத் அலி(ரலி) அவர்கள் கலீபாக்களில் இறுதியானவர் என்று கூறினால் அதனால் அவருக்கு எந்தவிதச் சிறப்பும் கிடைப்பதில்லை. அதைப் போன்றே இந்தியாவை ஆண்ட முகலாய அரசர்களில் கடைசியானவர் என்பதால் பஹதூர் ஷாஹ் சபருக்கும் எந்தச் சிறப்பையும் வரலாறு கொடுப்பதில்லை. ஒருவருடைய சந்ததிகளில் கடிசியானவர் என்ற காரணத்தால் எந்த ஒரு மகனுக்கும் சிறப்பு கிடைப்பதில்லை. அதைப் போன்றே ரஹ்மத் துன் லில் ஆலமீன் ஆகத் தோன்றிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுபுவ்வத் என்ற ரஹ்மத்தை நிறுத்துவதற்க்காக நபிமார்களில் இறுதியாகத் தொன்றியவராவார்கள் என்று கூறினால் நபிகள் நாயகத்திற்கு அதனால் எந்த ஒரு சிறப்பும் கிடைக்கப்போவதில்லை என்பதோடு மட்டுமல்ல, ஓர் இறையருளை நிறுத்துவதற்காகத் தோன்றிய ஒருவராகத்தான் அவர்கள் கணிக்கப்படுவார்கள். (நவூதுபில்லாஹ்)

ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களிலும் சிறப்புமிக்கவர்கள் என்பதில் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லை. ஆனால் இந்தக் கருத்தை எடுத்துக்காட்டுவதற்கு திருக்குரானில் 'காத்தமுன் நபிய்யீன்' என்ற சொல்லைத் தவிர வேறு எந்த ஒரு சொல்லும் பயன்படுத்தப்படவில்லை. அவ்வாறிருக்க காத்தமுன்னபிய்யீன் என்ற சொல்லுக்கு நபிமார்களில் இறுதியானவர் என்ற பொருளைக் கொடுத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்கில் சிறந்தவர் என்பதை எடுத்துக் காட்டும் எந்த சொல்லையும் திருக்குர் ஆனில் நாம் காண முடியாது. மேலும் நாம் பொதுவாக அன்றாடம் பயன்படுத்திவரும் நபிகள் நாயகம் (ஸல்) என்ற சொல்லுக்கும் திருக்குரானில் காத்தமுன்னபிய்யீன் என்ற சொல்லைத் தவிர வேறொரு சொல்லையும் காணமுடியாது.

jafarla said...

நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி கூறுகின்றார்கள்:

"எனது சிறிய தந்தையே! நான் எவ்வாறு "நபிமார்களுக்கெல்லாம் காத்தமாக இருக்கின்றேனோ, அவ்வாறே தாங்கள் முஹாஜிர்களுக்கெல்லாம் காத்தமாக இருக்கின்றீர்கள்" ( கன்சுல் உம்மால்: பாகம் 13, பக்கம் 519)

இதே போன்று ஹழ்ரத் அலி (ரலி) அவர்களை குறித்து "காத்தமுல் அவுலியா" என கூறியுள்ளார்கள். (தப்சீர் ஷாபி: சூரா அஹ்சாப் எனும் அதிகாரம்,)

"காத்தம்" என்ற சொல்லுக்கு "இறுதி" என்ற பொருள் கொண்டால் ஹழ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்கள் "இறுதி முஹாஜிர்" என்றும், ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் "இறுதி வலி" என்றும் நம்ப வேண்டியது வரும். இதனால் ஹழ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு பின் எந்த முஹாஜிரும் இல்லை என்றும் இஸ்லாமிய சான்றோர்கள் செய்த அனைத்து ஹிஜ்ரத்துகளும் மறுக்கப்பட்டு வீண் செயலாகிவிடும். இதை போன்று ஹழ்ரத் அலி (ரலி) அவர்களுக்குப் பின் எந்த இறைநேசரும் வர மாட்டார் என்றும் இஸ்லாமிய சமுதாயத்தில் ஒருவர் கூட இறை நேசராக வரவில்லை என்ற அவ சொல்லுக்கு ஆளாக வேண்டியதுவரும்.

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஹழ்ரத் ஆயிஷா(ரலி) அவர்கள் "காத்தமுன் நபிய்யீன்" என்ற சொல்லுக்கு இவ்வாறு விளக்கம் அளிக்கின்றார்கள்:

"நபி (ஸல்) அவர்களை காத்தமுன் நபிய்யீன் என்று சொல்லுங்கள், ஆனால் அவர்களுக்கு பிறகு எந்த நபியும் வர மாட்டார் என கூறாதீர்கள்.(துர்ரே மன்சூர் : பாகம் 5, பக்கம் 386)

இந்த ஹதீத் தஹ்தீபுத் தஹ்தீபில் ஹஸ்ரத் இப்னு ஹைஜர் (ரலி) அவர்கள் சரிபார்த்ததாகும். இந்த ஹதீதிலுள்ள எல்லா ராவிகளும் (அறிவிப்பாளர்களும்) முஹம்மதிப்னு சவ்வாரிலிருந்து அனஸ்வரை உறுதிவாய்ந்தவர்களாவார்கள்.

மேலும் 'தப்சீர் ஸாஃபி' என்னும் திருக்குர்ஆன் விளக்கவுரையில் காத்தமுன்னபிய்யீன் என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கையிலும், 'குனூசுல் ஹகாயிக்' என்னும் நூலிலும் 'அல் மனாகிப்' என்னும் நூலிலும் இந்த ஹதீஸ் காணப்படுகிறது. தப்சீருல் பயான் என்னும் நூலிலும் இந்த ஹதீஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

சஹாளிப்னு அப்துல்லாஹ் என்பவரிளிருந்து முஹம்மது பின் சவ்வார், மாலிகிப்னு தீனார், அல்ஹசனுல் பஸரீ, அனஸ் வரையுள்ள ராவிகள் இந்த ஹதீஸை ரிவாயத் செய்துள்ளனர்.

நாங்கள் தரும் விளக்கம், காதம் என்ற சொல் ஒரு கூட்டத்துடன் (பன்மையாக) வரும் போது அதற்க்குச் சிறந்தது என்ற பொருள் மட்டும்தான் இருக்கிறது என்று காட்டுவதற்காக இந்த ஹதீஸை நாங்கள் எடுத்துக் காட்டியுள்ளோம். இந்த ஹதீஸைப் பற்றி அது சஹீஹானதல்ல என்று ஒரு வாதத்திற்காக ஏற்ற்றுக் கொண்டாலும் அதனால் காதம் என்ற சொல்லுக்குச் சிறந்தது என்று அர்த்தமல்ல: இறுதியானது என்ற அர்த்தம் மட்டும் தான் இருக்கிறது என்று எவராலும் நிரூபித்துக் காட்ட இயலாது.

jafarla said...
This comment has been removed by the author.
jafarla said...

மேலும் சில சான்றுகளை இங்குத் தருகிறோம்.

அபூ தம்மாம் தாயீ என்னும் கவிஞ்சர் மரணமடைந்த போது ஹசன் பின் வஹ்ஹாப் என்ற கவிஞ்சர் எழுதிய ஒரு கவிதையில் அபூ தம்மாம் தாயீயை 'காத்தமுஷ்ஷூ அராயி கவிஞ்சர்களில் காத்தம் அதாவது சிறந்தவர் என்று வர்ணித்துள்ளார்கள். (வபாயத்துள் அய்யான், பாகம் ௧ பக்கம் )
தேவ்பந்து அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர் அல்லாமா முஹம்மத் காசிம் அவர்கள், ஷாஹ் அப்துல்லாஹ் அஸீயைப் பற்றி "ஹாத்தமுல் முஹத்திசீன் வல் முபஸ்ஸீரி (ஹத்யத்துஷ்ஷியா) என்றும்
சைஹுள் ஹிந்து மௌலானா மக்மூதுல் ஹசன், தமது 'மர்சிய்யா' என்னும் நூலில் மௌலானா ரஷீது அஹ்மத் அவர்களைப் பற்றி 'ஹாத்தமுல் அவ்லியா வல் முஹத்திசீன்' என்றும்
ஹஸ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ்வைப் பற்றி ஷாஹ் அப்துல் அசீஸ் அவர்கள், தமது 'உஜாலா நாபியா' என்னும் நூலில் 'காத்தமுல் முஹத்திசீன்' என்றும்
மகாமத்தே ஹரீரி என்னும் நூலில் அதன் ஆசிரியர், அல்காசிம் பின் அலியை, 'காத்தமுல் புல்கா' என்றும்
'முஅத்தா' ஹதீஸ் நூலில் ஷரஹில் அல்லாமா முஹம்மது சர்க்கானியை காத்தமுல் முஹக்கிகீன்' என்றும்
'இத்கான்' என்னும் நூலின் ஆசிரியர் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தியை 'காத்தமுல் முஹக்கிகீன்' என்றும் 'காத்தமுல் முஹத்திசீன்' என்றும்
'புதுஹாத்தே மக்கிய்யா' என்னும் நூலின் 'ஷேக் முஹியித்தீனிப்னு அரபியை 'காத்தமுல் அவ்லியா' என்றும்
பத்ஹுல் முயீன் என்னும் நூலில், அல்லாமா இப்னு ஹஜரில் ஹைதமியை, 'காத்தி மத்துல் முஹக்கிகீன்' என்றும்
மின்ஹாஜூ சுன்னத்' என்னும் நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தீமிய்யா வை 'காத்திமத்துல் முஜ்தஹிதீன்' என்றும் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய வாதம் என்னவென்றால் காதம் என்ற சொல், ஒரு பன்மைச் சொல்லுடன் இணைந்து வந்தால், அந்தச் சொல்லுக்கு சிறந்தது என்ற பொருள் மட்டும்தான் வரும். இறுதியானது, கடைசியானது என்று பொருள் வராது என்பதாகும். இதனை யாரும் மறுக்க முடியாது.

ஆகவே காதம் என்ற சொல், அந் நபிய்யீன் என்ற பன்மைச் சொல்லுடன் வந்தால் அதற்க்கு நபிமார்களில் சிறந்தவர் பூரணத் தன்மையைப் பெற்றவர் என்பது மட்டும்தான் பொருள். விவாதத்திற்க்குரிய மேற் குறிப்பிட்ட ஹதீஸ், தப்ஸீர் ஸாபியைத் தவிர ஹதீஸ் விளக்க நூல் 'உம்தத்துல் பயான்' என்னும் நூலிலும் மௌலவி மக்பூல் அஹ்மத் எழுதிய தர்ஜுமத்துல் குரான் என்னும் திருக்குர்ஆன் விளக்க நூலிலும் இடம் பெற்றிருக்கிறது.

jafarla said...


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி) நூல் : திர்மிதி (2145)

இந்த ஹதீஸில் எனக்குப் பின் நபியென்று வாதிடும் எல்லோரும் பொய்யர்கள் ஆவார்கள் எனக் கூறவில்லை. மாறாக நபி(ஸல்) அவர்களுக்கும் வரவிருக்கும் ஈசா நபிக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றக் கூடிய போய்வாதிகளின் எண்ணிக்கையைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பொய்யர்கள் தோன்றி மறைந்து விட்டார்கள் என இஸ்லாமிய வரலாறும் கூறுகிறது. முஸ்லிம் ஹதீசுக்கு விளக்கமாக எழுதப்பட்டுள்ள இக்மாளுள் இக்மால் என்ற நூலில், "இந்த ஹதீஸ் தனது உண்மையை நிரூபித்துவிட்டது. ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து நம் காலம் வரையில் நபியென்று வாதிட்ட பொய்யர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் இந்த எண்ணிக்கை முடிவடைகிறது. வரலாற்றைப் படித்தவர்கள் இதனை அறிவர்" (தொகுதி 7 பக்கம் 258) இந்த நூலின் ஆசிரியர் ஹிஜ்ரி 828இல் மறைந்தார். எனவே ஹிஜ்ரி 8ஆம் நூற்றாண்டிற்குள்ளாகவே அந்தப் பொய்யர்கள் தோன்றி மறைந்து விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் லைஸ பைனி வ பைனஹு நபிய்யன்(அபூதாவூத்) எனக்கும் ஈஸா நபிக்கும் இடையே நபிஇல்லை. இந்த ஹதீஸில் இருந்து முப்பது பொய் நபிமார்கள் வருவார்களே என்று கூறியது நபி (ஸல்) அவர்களுக்கும் ஈஸா நபி க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றக் கூடிய பொய் நபிமார்களைப் பற்றியதாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு பின் இமாம் மஹ்தியும், மசிஹும் வர இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்று எவ்வாறு சொல்ல முடிகிறது. இவ்வும்மத்தில் வரக்கூடிய ஈஸா(அலை) அவர்களை குறித்து நபி (ஸல்) அவர்கள் அவர் அல்லாஹ்வின் நபியாவார், அவருடன் சஹாபாக்களும் வருவார்கள். என்று ஒரே நபி மொழியில் நான்கு முறை கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்: பாகம் 4, ஹதீஸ்: 5629)
அவ்விருவரையும் (இமாம் மஹ்தி, ஹழ்ரத் ஈஸா (அலை))வெவ்வேறாக கருதிவிடவேண்டாம். அவர்கள் இருவரும் ஒருவரே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.லல் மஹ்தி இல்லா ஈஸா (ஆதாரம்: இப்னு மாஜா: பாகம்:2பக்கம்:1341)

வரக்கூடிய மஹ்தி மஸிஹ் அவர்கள் நபியாக இருப்பார்கள் என்பதை நாம் மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தெளிவாக அறிந்தோம்.

jafarla said...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்கüன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, "இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டி ருக்கக் கூடாதா?'' என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்கüல் இறுதியானவன்.// இங்கும் இறுதியில் காத்தமுன் நபியீன் என்று கூறுகிறார்கள். இங்கு நபிமார்களில் இறுதியாக வந்தேன் என்று கூறவில்லை.

இங்கு நபி (ஸல்) அவர்கள் கட்டிடத்தை குறிப்பிட்டது ஷரியத்தை குறிக்கும். நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த நபிமார்கள் கொண்டு வந்த ஷரியத்தை விட நபி (ஸல்) கொண்டு வந்த ஷரியத் முழுமை பெற்றதாக இருக்கிறது. இதை நபி (ஸல்) அவர்கள் முழுமை பெற்ற கட்டிடத்திற்கு ஒப்பாகக் கூறுகிறார்கள். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் காத்தமுன் நபியீனாக அதாவது எல்லா நபிமார்களை விடவும் சிறந்த நபியாக இருக்கிறார்கள்.

jafarla said...

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி (3455)

____________________________இஸ்ரவேலர்களிடையே ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து நபிமார்கள் வந்ததைப் போல் இந்த உம்மத்தில் தொடர்ந்து நபிமார்கள் வரமாட்டார்கள். மாறாக தொடர்ந்து உடனே வரக்கூடியவர்கள் கலீபாக்களாகேவே இருப்பார்கள் என்றுதான் இந்த ஹதீஸ் கூறுகிறது. ஈசா நபி வரமாட்டார் என்றோ, எந்த நபியும் வர முடியாது என்றோ கூறவில்லை.

jafarla said...

தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலிலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலிலி) அவர்கள், "குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை'' என்று சொன்னார்கள். (நூல் : முஸ்லிம் 4777)///_______________

இந்த ஹதீஸில் மூஸா நபியின் காலத்தில் அவர்களுடன் ஹாரூனும் நபியாக இருந்ததைப்போல் அலி(ரலி) நபியாக இல்லை என்ற கருத்தையே தருகிறது. இங்கு உள்ள பஹ்த என்ற சொல்லுக்கு தவிர என்ற அர்த்தத்தையே கொடுக்க முடியும். மேலும் எந்த என்ற சொல் இந்த ஹதீஸில் வரவில்லை. லா நபிய பஹ்தி என்றே வருகிறது. அதாவது என்னை தவிர நபி இல்லை. இது நபி (ஸல்) அவர்களின் காலத்தையே குறிக்கும். இங்கு மூஸா வை ஹாரூனுடனும், தன்னுடன் அலி (ரலி) அவர்களையும் ஒப்பிட்டுக் கூறியதற்கு இதுவே சான்றாகும். நபி மார்களை நியமிப்பது அல்லாஹ்வாகும். நபி (ஸல்) அவர்கள் குறிப்பட்டது தன்னுடைய காலத்தில் வேறு நபி இல்லை என்பதையே ஆகும்.

jafarla said...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தூதுத்துவமும் நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டது. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை நபியும் இல்லை. (நபியவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. உடனே நபியவர்கள் என்றாலும் நற்செய்திகள் (எஞ்சியுள்ளது) என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே (முபஸ்ஸராத்) நற்செய்திகள் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி (2198)//----------------------இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் வரிசையில் அனஸ் பின் மாலிக்கைத் தவிர உள்ள நான்கு அறிவிப்பாளர்களும் பலவீனமானவர்கள். மேலும் ஈசா நபி நபியாக வருவார்கள் என்பது உறுதியானதாக இருப்பதால் இந்த ஹதீஸை சொர்போருளில் ஏற்க முடியாது. ஏற்கனவே இதற்கு மேலே பதில் கொடுத்திருக்கிறேன். அதாவது நபி (ஸல்) அவர்கள் வரக் கூடிய ஈசா நபி நபியாக இருப்பார்கள் என்று கூறுகிறார்கள். இவ்வும்மத்தில் வரக்கூடிய ஈஸா(அலை) அவர்களை குறித்து நபி (ஸல்) அவர்கள் அவர் அல்லாஹ்வின் நபியாவார், அவருடன் சஹாபாக்களும் வருவார்கள். என்று ஒரே நபி மொழியில் நான்கு முறை கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்: பாகம் 4, ஹதீஸ்: 5629) ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"எனக்கும் அவருக்கும், அதாவது ஈசாவிற்கும் இடையில் எந்த நபியுமில்லை".(அபூதாவூத், கிதாபுல் மலாஹிம். பாபு. குருஜுத் தஜ்ஜால்)

jafarla said...

இஸ்லாத்தின் பலவேறு மார்க்க அறிஞ்சர்களும் இமாம்களும் இந்தக் கருத்தை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக, ஹஸ்ரத் முல்லா அலிய்யுள் காரீ (ரக) அவர்கள் இவ்வாறு விளக்கம் தந்துள்ளார்கள்:

(கத்தமுன் நபிய்யீன் என்பதன்) பொருள் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அன்னாரின் மார்க்கத்தை (ஷரியத்தை) ரத்து செய்கின்ற, அன்னாரின் உம்மத்தைச் சேராத எந்தவொரு நபியும் வரமாட்டார் என்பதேயாகும்."(மௌலு ஆத்தே கபீர் பக்கம்: 59 )

இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று இவ்வாறு அமைந்துள்ளது:

"நீங்கள் (ஹஸ்ரத் நபி (ஸல்)) அவர்களை காத்தமுன் நபிய்யீன் என்று கூறுங்கள்: அனால் அவர்களுக்குப் பிறகு எந்த நபியுமில்லை என்றக் கூறாதீர்கள்". (தக்மில மஜ்மயி பிஹாரில் அன்வார் தொகுதி 4, பக்கம்: 85 )


ஹஸ்ரத் இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷிஹ்ரானீ (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள்:

"எல்லா நுபுவத்தும் முடிந்துவிட்டது என்பதன்று; ஷரீஅத்துடைய நுபுவத் மட்டுமே முடிந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்". (அல் யவாகியது வால் ஜவாகிர் தொகுதி 2, பக்கம் 24)

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தால் கடைசியானவர் என்ற பொருளைக் கொடுப்பதில் அவர்களுக்கு எந்த பெருமையுமில்லை என்ற இஸ்லாமிய கருத்தை தேவ்பந்த் மதரஸாவின் தோற்றுநர் மௌலவி முஹம்மது காஸிம் சாஹிப் நானுத்வி அவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அவர் கூறுகிறார்.

'ரெஸுலுல்லாஹ் அவர்கள் காத்தமுன்னபிய்யீன். ஆக இருக்கிறார்கள் என்பது, பொது மக்களின் பார்வையில், அன்னாரின் காலம், சென்ற கால நபிமார்களின் காலத்திற்கு பிற்பட்டது; நபி (ஸல்) அவர்கள் அனைவரையும் விட கடைசி நபியாவார்கள் என்ற பொருள்ளாகும். ஆனால் காலத்தால் முற்பட்டவராக இருப்பதிலோ, பிற்பட்டவராக இருப்பதிலோ தனிப்பட்ட முறையில் எந்த சிறப்பும் இல்லை என்பது அறிவுள்ளவர்களுக்கு மிகத் தெளிவான விஷயமாகும். பிறகு, 'ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கு காத்தமாகவும் இருக்கிறார்' எனக் கூறுவது புகழ்ந்துரையாகும் என்பது எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்? இந்தப் பண்பை புகழ்ந்துரையாகக் கூறப்பட்ட பண்பு அல்ல என்று கூறுவீர்கள் என்றால், இந்த அந்தஸ்தை புகழ்ந்துரையின் அந்தஸ்து அல்ல எனக் கூறுவீர்கள் என்றால் அப்போது வேண்டுமானால் அந்த காத்தமிய்யத் காலத்தால் பிற்பற்றது(இறுதியானது) என்று கூறுவது சரியானதாக இருக்க முடியும். ஆனால் இஸ்லாத்தைச் சேர்ந்த எவரும் இ(இப்படிப் பொருள் கொடுப்ப) தை விரும்ப மாட்டார் என்பதை நான் அறிவேன்".(தஹ்தீருன்னாஸ் பக்கம் 3)

மேலும் அவர் கூறுவதைப் பாருங்கள்: "ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்திற்குப் பிறகும் ஒரு நபி தோன்றினாள் அப்போது முகம்மதியா காத்தமிய்யத்திற்கு எந்த வித்தியாசமும் வந்து விடாது" (தஹ்தீருன்னாஸ் பக்கம்:28)

jafarla said...

இதே கருத்தைதான் நபி மொழிகளும் எடுத்துரைகின்றன. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணமடைந்த பொது ஹஸ்ரத் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

"அவர் உயிரோடிருந்தால் கண்டிப்பாக அவர் உண்மை நபியாக இருந்திருப்பார்." (இப்னு மஜா - கிதாபுல் ஜனாயிஸ்)

ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமின் கபர் மீது கை வைத்தவாறு, அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக இவர் நபியும் நபியின் மகனும் ஆவார் எனக் கூறினார்கள்".

(தாரீகுல் கபீர் லி இப்னி அஸாகிர் பக்கம்: பதாவா அல் ஹதீஸிய்யா பக்கம்:176 )

காத்தமுன்னபிய்யீன் என்ற (33:41) வசனம் ஹிஜ்ரி ஆம் ஆண்டில் இறங்கியது. ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இந்த இறங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டில் மரணமடைகின்றார். காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பார்வையில் இறுதி நபி என்பது பொருள் என்றால் அன்னார் என்ன கூறியிருக்க வேண்டும்? இப்ராஹீம் உயிருடன் இருந்தாலும் அவர் நபியாக மாட்டார். ஏனெனில் நான் காத்தமுன்னபிய்யீன் ஆக இருக்கிறேன் என்றல்லவா கூறியிருக்கவேண்டும்.? அவ்வாறு கூறியிருந்தால் காத்தமுன்னபிய்யீன் என்பதற்கும் இவர்கள் கூறுவதுபோல், நபிமார்களில் இறுதியானவர் என்று பொருள் கொள்ள இடமிருக்கிறது. ஆனால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களோ, அவர் உயிருடன் இருந்தால், உண்மை நபியாக இருப்பார் என்றல்லவா கூறியிருக்கிறார்கள்!

ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவிப்பின்படி, இவர் ஒரு நபியும், நபியின் மகனுமாவார் என்ற ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கூற்று இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தக் கருத்தை நாம் மட்டுமல்ல, நமக்கு முன்னரே மார்க்க அறிஞ்சர்களும் கூறியிருக்கிறார்கள். ஹஸ்ரத் இமாம் முல்லா அலியுல் காரீ அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:

"இப்ராஹீம் உயிரோடு இருந்து, நபியானாலும் அவர் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவராகவே இருந்திருப்பார். அத்தகைய சூழ்நிலையில் அவர் நபியாவது காத்தமுன்னபிய்யீன் என்பதன் கருத்தில் எந்த முரண்பாட்டையும் உருவாக்க முடியாது. ஏனெனில் காத்தமுன்னபிய்யீன் என்பதன் பொருள், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் ஷரியத்தை ரத்து செய்யக் கூடியவரும், அவர்களுடையா உம்மத்தை செராதவருமாகிய எந்தவொரு நபியும் வரமாட்டார் என்பதேயாகும்".(மௌளு ஆத்தே கபீர் பக்கம்: 66,67)

அடுத்து இறுதி, கடைசி என்று கூட ஒரு நபிமொழியில் வந்துள்ளதே என்று சிலர் கேட்கலாம். அங்கேயும் காலத்தால் இறுதியானவர் என்ற பொருள் கொடுக்கவே முடியாது: ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பொருள் கொடுக்கவில்லை என்பதற்கு அந்த நபிமொழியின் பிற்பகுதியே சான்றாகத் திகழ்கின்றது. உதாரணமாக,

நான் நபிமார்களில் இறுதியானவராக இருக்கிறேன். எனது இந்தப் பள்ளிவாயில் பள்ளி வாயில்களில் இறுதியானதாக இருக்கிறது என ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், பாபு பஸ்லுல் ஸலாத்தி பீ மஸ்ஜிதில் மதீனா)

இதில், ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதே நபவியை பள்ளிகளில் இறுதியானது என்று கூறியிருந்த போதிலும் அதற்குப் பிறகும் பல்லாயிரக்கணக்கான பள்ளிவாயில்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, பள்ளிகளில் இறுதியானது என்றால், இனி உலகத்தில் எந்தப் பள்ளிவாசலும் கட்டப்படக்கூடாது என்று பொருள் அல்ல, மாறாக இனி எனது பள்ளிவாயிலுக்கு எதிராக, விரோதமாக எந்தப் பள்ளிவாயிலும் காட்டப்படமாட்டாது. எந்த பள்ளிவாயில் கட்டினாலும் அது எனது இந்தப் பள்ளிவாயிலைப் பின்பற்றியவாறு கட்டப்படும் என்றே பொருள்படும். அவ்வாறே நபிமார்களில் இறுதியானவன் என்றால், காலத்தால் இறுதி நபியானவன். இனி எந்த நபியும் வரமாட்டார் என்று பொருள் அல்ல. மாறாக எனக்கு எதிராக, விரோதமாக எந்த நபியும் இல்லை; என்னைப் பின்பற்றிய நபியே வரமுடியும் என்றுதான் பொருளாகும்.

இறுதி என்றாலும் எந்தக் கருத்தில் தமக்குப் பொருந்துகிறது என்பதை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களே நமக்குத் தெளிவு படுத்திவிட்டார்கள். அதாவது காலத்தால் இறுதியானவர் என்பதல்ல, அந்தஸ்தால் இறுதியானவர்; இனி அன்னாரைப் பின்பற்றாமல் எவரும் நபியாகவோ, சித்திக்காகவோ, ஷஹீதாகவோ, ஏன் சாலிஹாகவோ கூட ஆக முடியாது. இந்த உயரிய கருத்தைத்தான் நாம் திருக்குர்ஆன் 4:70 வது வசனத்தில் விளங்கிக் கொள்கிறோம்.

jafarla said...

முதல் குற்றச்சாட்டு

சுல்தான் முஹம்மது என்பவர் முகமதி பேகம் என்கிற பெண்ணை திருமணம் செய்தால், சுல்தான் முஹம்மது முப்பதே மாதங்களில் இறந்து போவார். அதன் பிறகு நான் அவளை திருமணம் செய்து கொள்வேன் என்றுஆயினே கமாலதே இஸ்லாம் என்கிற நூல் பக்கம் 325 இல் எழுதியுள்ளான்.
வேடிக்கையான விஷயம் - அந்த சுல்தான் முஹம்மத் இறப்பதற்கு முன் இந்த மிர்சா குலாமே இறந்து போனான்!! தான் கூறிய ஒன்று பொய்த்து போனால் அவன் நபியாக இருப்பானா?

இதில் உச்சகட்ட வேடிக்கை, இவ்வாறு நடக்காமல் போனால், நான் நபி இல்லை என்பதற்கு அதுவே ஆதாரம், என்று வேறு வாய் கொடுத்து மாட்டியுள்ளான் இந்த மிர்சா குலாம் (அதே நூல், அதே பக்கம



இமாம் மஹ்தி அவர்கள் இது தொடர்பாக ஆறு முன்னறிவிப்புகள் செய்தார்கள்.

இறைவனின் கட்டளைக்கேற்ப தாம் இந்தச் செய்தியை அறிவிப்பதாகவும் தமது சொந்த விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் இதில் இல்லைஎன்றும் இன்னொரு திருமணம் செய்யவேண்டிய எவ்விதத் தேவையும் தமக்கு தற்போது இல்லைஎன்றும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் அச்சமயத்தில் வெளிப்படையாகவே அறிவித்தார்கள் (அறிக்கை 15 ஜூலை 1888)

இது முழுக்க முழுக்க உண்மையென்பதை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் வாழ்க்கையை ஆராயகின்றவர்கள் உணர்ந்துகொள்ளலாம்.

ஹம்ரத் பீபீ என்பவரோடு அவர்களுடைய முதல் திருமணம் நடந்ததென்றாலும் அவர்களுக்கு 21 வயதான பொது அதில் முறிவு ஏற்பட்டது. பின்னர் ஏறத்தாழ 28 ஆண்டுகள் அவர்கள் மணமுடிக்காது வாழ்ந்தார்கள். இக்காலகட்டத்தில் அவர்கள் இல்லற வாழ்க்கைப் பற்றிய எண்ணமே இல்லாது முழுக்க முழுக்க இறைப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அதாவது தமது இளமைப் பருவத்தை இஸ்லாமிய சேவைக்காக அர்ப்பணித்தார்கள். பின்னர் நவாப் மீர் தர்த் என்பவரின் வழித்தோன்றலும் உயர்ந்த பாரம்பரியத்தில் வந்தவருமான ஹஸ்ரத் நுஸ்ரத் ஜஹான் பேகம் அவர்களை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் 1884 இல் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில், நாத்தீக வாதமும் இஸ்லாத்தின் எதிரிகளோடு தொடர்பும் உள்ள ஒரு குடும்பத்தில் பெண் கேட்க, இறை கட்டளையைத் தவிர எந்தக் காரணமும் ஹஸ்ரத் அஹமத் (அலை) அவர்களுக்கு இல்லை என்பதை நியாயஉணர்வுள்ள எவரும் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இந்த வரலாற்று உண்மையைத் தெரிந்து கொள்ளாது தங்களின் சொந்த மன விகாரங்களை வெளிப்படுத்துகின்ற வகையில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மீது அருவருக்கத்தக்க அவதூறுகளை பி.ஜே யைப் போன்ற பொய்யர்கள் சிலர் சுமத்துகின்றனர். இது இவர்களின் இறையச்சமற்ற மனப்போக்கையே காட்டுகின்றது. இதனால் இவர்களுக்கு ஏற்படவிருக்கும் சாபங்களையும் இறை தண்டனைகளையும் இவர்கள் உணர்வதில்லை.

அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்கும் வரை நான் உயிரோடு இருப்பேன்.
அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்கும் வரை பெண்ணின் தந்தை உயிரோடு இருப்பார்.
அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து இரண்டு வருடத்திற்குள் பெண்ணின் தந்தை (முஹம்மது பேக்) இறந்து விடுவார்.
அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து மூன்று வருடத்திற்குள் பெண்ணின் கணவர் இறந்து விடுவார்.
பின்னர் அந்த பெண் விதவையாகி என்னுடைய நிக்காஹிற்குள் வருவார்
அந்த பெண்ணை நான் திருமணம் செய்வேன்.

jafarla said...

முகமதி பேகத்திற்கும மிர்ஸா சுல்தான் முஹம்மதுவிற்கும் திருமணம் நடக்கிறது இமாம் மஹ்தி (அலை) அவர்கள் உயிரோடு இருந்தார்கள் இதன் மூலம் முதல் முன்னறிவிப்பு நிறைவேறுகிறது.

முகமதி பேகத்திற்கு திருமணம் நடக்கும் வரை பெண்ணின் தந்தை உயிரோடு இருப்பார் என்ற இரண்டாவது முன்னரிவிப்பின்படி பெண்ணின் தந்தை முஹம்மது பேக் உயிரோடு இருந்தார்.

முகமதி பேகத்திற்கு திருமணம் நடந்து இரண்டுவருடதிற்கும் பெண்ணின் தந்தை இறந்துவிடுவார் என்ற இமாம் மஹ்தி (அலை) அவர்களின் முன்னறிவிப்பின் படி முகமது பேக் ஆறுமாதத்தில் இறந்துவிட்டார்.

நான்காவதாக பெண்ணின் கணவர் மூன்று வருடத்திற்குள் இறந்துவிடுவார் என்ற முன்னறிவிப்பு நிறைவேறவில்லை என்பதுதான் இவர்களின் குற்றச்சாட்டு இதற்க்கு பெண்ணின் கணவர். பதில் கூறுகிறார். நிச்சயமாக என்னுடைய மாமனார் முஹம்மது பேக் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் முன்னரிவிப்பின்படி இறந்து விட்டார். ஆனால் நான் என் இறக்கவில்லை அதைப் பற்றி கூறுகிறார். இறைவன் ரவூபு ரஹீமாக இருக்கின்றான். அல்லாஹ் பாவங்களை மன்னிக்கக் கூடியவனும், கருணை கட்டுபவனுமாக இருக்கின்றான். நான் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடியதால்தான் தான் மரணிக்கவில்லை என்பதை அவரே தெரிவித்தார் அந்த கடிதம் இன்றும் இன்றும் அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தால் வெளியிடப்பட்ட நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

iமுகம்மதி பேகத்தின் மகன் மிர்ஸா இஸ்ஹாக் பேக், ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறிய முன்னறிவிப்புகள் நிறைவேறியது குறித்துக் கூறியிருப்பதைப் பாருங்கள்:

"என்னுடைய பாட்டனார் மிர்ஸா முஹம்மது பேக், முன்னறிவிப்பின் படியே இறந்து போனார். இதற்குப் பின் எஞ்சிய குடும்பத்தினர் பயந்து போய் தங்களைத் திருத்திக் கொண்டார்கள். அவர்களில் அநேகம் பேர் அஹ்மதியத்தில் இணைந்தது, இதற்கொரு மறுக்கயியலாத சான்றாகும் (அல்-பஸல் 1923)

அக்காலத்தில் அஹ்மதியா ஜமாத்தின் மிகப் பெரிய எதிரியாக விளங்கிய அஹ்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் மௌலவி முஹம்மது ஹுசைன் பட்டாலவி கூறியிருப்பதைப் பாருங்கள்:-

"இந்த முன்னறிவிப்புகள் நிறைவேறின ஆனாலும் அவை ஜோதிடமாகும்" (இஷா அத்துஸ் சுன்னா, வால்யும்5)

மௌலவி முஹம்மது ஹுசைன் பட்டாலவி, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு வஹி என்னும் இறையரிவிப்பு வருகிறது என்பதை நம்பாவிட்டாலும் அவர்கள் முகம்மதி பேகம் தொடர்பாக கூறிய முன்னறிவிப்புகள் நிறைவேறின என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

முகம்மதி பேகத்தின் கணவரான மிர்ஸா சுல்தான் முஹம்மது, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பற்றித் தமது கைப்பட எழுதிய ஒரு கடிதம் தஸ்கிஸுள் அஸான் என்னும் எட்டில் மே,1913 இதழில் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது:

"நான் எப்போதுமே மறைந்த மிர்ஸா சாஹிப் அவர்களை நேர்மையான, கண்ணியத்திற்குரிய ஒருவராகவே எண்ணுகிறேன். அவர்கள் ஒரு உன்னதமான ஆன்மாவாகவும் எப்போதும் இறைவனை எண்ணத்தில் கொண்டவருமாவார்கள். நான் அவர்களைப் பின்பற்றுபவர்களை எதிர்க்கின்ற்றவன் அல்ல. சில காரணங்களால் அவர்களுடைய வாழ்நாளில் அவர்களை சந்திக்கின்ற நற்பேறு எனக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்.

jafarla said...

http://imaammahdi.blogspot.in/2011/10/blog-post_05.html

The-Criterion said...

அல்லாஹ்வின் மீதும் ரஸுலின் மீதும் பொய்யை இட்டுக்கட்டியவன் மீதும் அந்த பொய்க்கு வக்காலத்து வாங்குபவன் மீதும் அல்லாஹ்வின் சாபமும் வாணவர்களின் சாபமும் நல் மணிதர்களின் சாபமும் உண்டாகட்டும்
Jafrla khan உங்கள் பொய்யன் குரு போல் உலறாமல் இந்த மூன்றிற்கும் பதில் தாருங்கள்
1.மிர்சா குலாமும் முஹம்மதீ பேகம் திருமணமும்
2. பொய்யன் மிர்சாவின் புளுகு மூட்டை
3. அல்லாஹ்வின் மீது பொய் கூறிய மிர்சா

jafarla said...

பொய்யன் பி.ஜே யின் புளுகு மூட்டைகளுக்கு பதில். www.ahmadiyamuslimjamath.blogspot.in

Ashfaaq Reshard said...

\\\நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் லைஸ பைனி வ பைனஹு நபிய்யன்(அபூதாவூத்) எனக்கும் ஈஸா நபிக்கும் இடையே நபிஇல்லை. இந்த ஹதீஸில் இருந்து முப்பது பொய் நபிமார்கள் வருவார்களே என்று கூறியது நபி (ஸல்) அவர்களுக்கும் ஈஸா நபி க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றக் கூடிய பொய் நபிமார்களைப் பற்றியதாகும். ///


என்னவா கொள்க சொல்லுரிங்க முதல்ல உங்களுடைய காஃபிர் தலைவர்களிடம் பெய்ட்டு அஹ்மதியாவுடைய கொள்கை என்ன என்று ஒரு முடிவு எடுத்து சொல்லுங்கன்னு கேட்டு தெரிஞிக்கிட்டு வாங்கய்யா. உங்களுடைய புதிய கண்டுபிடிப்பின் படி ஈஸா (அலை) இரன்து விட்டதாகவும் அவர்கள் திரும்ப வரமாட்டார்கள் எனவும் வாதிடிகிரீர்கள் . மீண்டும் இப்போ இங்கே வந்து மடத்தனமா முரனாகா எனக்கு ஈஸா நபிக்கும் இடையில் எந்த நபியும் இல்லை என்று வாதம் வெக்கிரீர்கள். ஒருவன் வழிகேடன் என்பதற்கு மிகப்பெரும் சான்று தனக்கு தானா முரனாக கதைப்பது

Ashfaaq Reshard said...

\\\நான்காவதாக பெண்ணின் கணவர் மூன்று வருடத்திற்குள் இறந்துவிடுவார் என்ற முன்னறிவிப்பு நிறைவேறவில்லை என்பதுதான் இவர்களின் குற்றச்சாட்டு இதற்க்கு பெண்ணின் கணவர். பதில் கூறுகிறார். நிச்சயமாக என்னுடைய மாமனார் முஹம்மது பேக் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் முன்னரிவிப்பின்படி இறந்து விட்டார். ஆனால் நான் என் இறக்கவில்லை அதைப் பற்றி கூறுகிறார். இறைவன் ரவூபு ரஹீமாக இருக்கின்றான். அல்லாஹ் பாவங்களை மன்னிக்கக் கூடியவனும், கருணை கட்டுபவனுமாக இருக்கின்றான். நான் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடியதால்தான் தான் மரணிக்கவில்லை என்பதை அவரே தெரிவித்தார் அந்த கடிதம் இன்றும் இன்றும் அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தால் வெளியிடப்பட்ட நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.///


புலுகு மூட்டைக்கு அலவு இல்லையாப்பா கர்மம் புடிச்சவனுங்களா , தூ...

Post a Comment