29 June 2011

பீடி மண்டி நடத்துபவர் இமாமத் செய்யலாமா?


கேள்வி : நான் ஐவேளைத் தொழுகைக்காக .......  உள்ள மஸ்ஜிதே நூர் தவ்ஹீத் பள்ளிக்குச் சென்று வருகிறேன். அங்கு தொழுகைக்காக இமாம் யாருமில்லை. ஆதலால் அங்கு யார் தவ்ஹீத் வாதி வருகிறாரோ (குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்தவர்) அவர் தொழவைக்கலாம். இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் ஒரு நபர் இமாமத் செய்கிறார். அவர் பீடி மண்டி நடத்துகிறார். அவர் இமாமத் செய்யலாமா? இதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் மார்க்கத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

கூட்டுத் துஆ நபிவழியா?

கூட்டுத் துஆ நபிவழியா?
ஜிப்ரீல் (அலை) அவர்களுடைய ஹதீஸில் கூட்டுத் துஆவிற்கு எந்த ஆதாரமும் இல்லை.
7256 عن كعب بن عجرة قال : قال رسول الله صلى الله عليه و سلم : احضروا المنبر فحضرنا فلما ارتقى درجة قال : آمين فلما ارتقى الدرجة الثانية قال : آمين فلما ارتقى الدرجة الثالثة قال : آمين   فلما نزل قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه قال : إن جبريل عليه الصلاة و السلام عرض لي فقال : بعدا لمن أدرك رمضان فلم يغفر له قلت آمين فلما رقيت الثانية قال بعدا لمن ذكرت عنده فلم يصلي عليك قلت آمين فلما رقيت الثالثة قال بعدا لمن أدرك أبواه الكبر عنده فلم يدخلاه الجنة قلت آمين (المستدرك - (ج 4 / ص 170)

28 June 2011

பெண்கள் ஆடை அணியும் முறை

5. பெண்கள் ஆடை அணியும் முறை       தொடர் 5

பெண் என்பவள் அந்தரங்கமானவள்.
1093 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ مُوَرِّقٍ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتْ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ  رواه الترمدي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பெண் என்பவள் அந்தரங்கமானவள் ஆவாள். அவள் (வீட்டிலிருந்து) வெளியேறினால் ஷைத்தான் அவளை முன்னோக்குகிறான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலிநூல் : திர்மிதி (1093)
ஹதீஸின் விளக்கம் :
அதாவது பெண்ணாகிறவள் ஆண்களின் கண்களுக்கு அலங்காரமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். இதை அல்லாஹ் பல்வேறு திருமறை வசனங்களில் கூறுகிறான்.

பட்டாடை அணிதல் (தொடர் 4)

4. பட்டாடை அணிதல்
பட்டாடையணிவது ஆண்களுக்குத் தடை
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي وَأُحِلَّ لِإِنَاثِهِمْ رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' பட்டாடை அணிவதும்  தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும்.''
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி),  நூல் : திர்மிதீ (1642)

27 June 2011

வெள்ளை ஆடையும் காவி ஆடையும் (தொடர் : 3)




3. வெள்ளை ஆடையும் காவி ஆடையும்
ஆடைகளில் சிறந்து
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَسُوا مِنْ ثِيَابِكُمْ الْبَيَاضَ فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''வெண்மையான ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் அதுதான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.''
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : திர்மிதி (915)
ஆடைகளில் தூய்மையானது
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَسُوا الْبَيَاضَ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُم  رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத் தூய்மையானதும் மணமிக்கதும் ஆகும்.''
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுýன்துப் (ரலி), நூல் : திர்மிதி (2734)

ஆடையணிவதில் தடைசெய்யப்பட்ட முறைகள் (தொடர் : 2)


2. ஆடையணிவதில் தடைசெய்யப்பட்ட முறைகள்
ஆடை தரையில் இழுபடக் கூடாது
عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مِرَارًا قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ رواه مسلم
''மூன்று (வகையான) நபர்களிடம் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையும் இருக்கின்றது'' என்ற இறைவசனத்தை நபியவர்கள் மூன்று முறை ஓதினார்கள். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள், நஷ்டமடைந்துவிட்டாகள்'' என்று கூறிவிட்டு ''அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 1. தன்னுடைய கணுக்காலுக்கு கீழ் ஆடையை இழுத்துக் கொண்டு செல்பவன் 2. செய்த உதவியை சொல்லிக்காட்டக் கூடியவன் 3. பொய்சத்தியம் செய்து தன்னுடைய பொருளை விற்கக்கூடியவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : முஸ்லிம் (171)

ஆடையணிவதின் ஒழுக்கங்கள் (தொடர் : 1)


1.       ஆடையணிவதின் ஒழுக்கங்கள்
அல்லாஹ்வின் அருள்
يابَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ(26) سورة الأعراف
ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
                (அல்குர்ஆன் 7: 26)

25 June 2011

கஅபா அபய பூமி என்பதின் விளக்கம்

கஅபா அபய பூமி என்பதின் விளக்கம்
திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் கஅபாவை அபய பூமியாக பாதுகாப்புத் தலமாக ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான்.
وَقَالُوا إِنْ نَتَّبِعِ الْهُدَى مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَا أَوَلَمْ نُمَكِّنْ لَهُمْ حَرَمًا آَمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ (57) سورة القصص
அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்க ளில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் (அல்குர்ஆன் 28 : 57)

22 June 2011

உறவுக்கு முன்பாக கணவன் பிரிந்து விட்டால் இத்தா அவசியமா?

கேள்வி : எனக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நிக்காஹ் முடிந்து சிறிது நேரத்தில் வெளியில் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு வரதட்சணையாக கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்றவர் பிறகு வரவே இல்லை. பிறகு விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் ஒரு வோறொரு பெண்ணோடு ஒரு ஊரில் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. ஒரு நாள் கூட அவரோடு சேர்ந்து வாழவில்லை. அன்றிலிருந்து நான் தனியாகத்தான் வசித்து வருகிறேன். இப்பொழுது மறுமணம் செய்து கொள்ள இருப்பதால் நான் குலாஃ செய்து விட்டுத்தான் மறுமணம் செய்ய வேண்டுமா? அல்லது எட்டு வருடங்கள் தொடர்பு இல்லாததால் நான் இப்போதே மறுமணம் செய்து கொள்ளலாமா? இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு வழங்கும்படி வேண்டிக் கொள்கிறேன்

சித்தப்பா விவாகரத்து செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?


சித்தப்பா விவாகரத்து செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?

பதில் : திருமறைக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் யார் யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمْ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنْ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمْ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمْ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمْ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا(23) 4
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க)