4. பட்டாடை அணிதல்
பட்டாடையணிவது ஆண்களுக்குத் தடை
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي وَأُحِلَّ لِإِنَاثِهِمْ رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' பட்டாடை அணிவதும் தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும்.''
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி), நூல் : திர்மிதீ (1642)
பட்டாடை இறைமறுப்பாளனின் ஆடை
عن حُذَيْفَةَ وَلَكِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَلْبَسُوا الْحَرِيرَ وَلَا الدِّيبَاجَ وَلَا تَشْرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ وَلَا تَأْكُلُوا فِي صِحَافِهَا فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا وَلَنَا فِي الْآخِرَةِ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''சாதாரனப் பட்டையோ அலங்காரப்பட்டையோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் இறைமறுப்பாளர்களாகிய அவர்களுக்கும் மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியதாகும்.''
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி), நூல் : புகாரி (5426)
பட்டாடை மீது அமர்வதற்கும் தடை
عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ وَأَنْ نَأْكُلَ فِيهَا وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ وَأَنْ نَجْلِسَ عَلَيْهِ رواه البخاري
பட்டாடையின் மீது அமர்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்
அறிவிப்பவர் : ஹுýதைஃபா அல்யமான் (ரலி), நூல் : புகாரி (5837)
மறுமையின் ஆடையே பட்டு
عَنْ أَبِي عُثْمَانَ قَالَ كُنَّا مَعَ عُتْبَةَ فَكَتَبَ إِلَيْهِ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُلْبَسُ الْحَرِيرُ فِي الدُّنْيَا إِلَّا لَمْ يُلْبَسْ فِي الْآخِرَةِ مِنْهُ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் ''இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : புகாரி (5830)
இரண்டு விரல் அளவுக்கு மட்டும் அணிந்து கொள்ள அனுமதி
سَمِعْتُ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ أَتَانَا كِتَابُ عُمَرَ وَنَحْنُ مَعَ عُتْبَةَ بْنِ فَرْقَدٍ بِأَذْرَبِيجَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْحَرِيرِ إِلَّا هَكَذَا وَأَشَارَ بِإِصْبَعَيْهِ اللَّتَيْنِ تَلِيَانِ الْإِبْهَامَ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடைசெய்தார்கள். இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய ) இருவிரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : புகாரி (5828)
சிரங்கு நோய் பிடித்தவர்கள் பட்டாடை அணிய அனுமதி
أَنَّ أَنَسًا حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَالزُّبَيْرِ فِي قَمِيصٍ مِنْ حَرِيرٍ مِنْ حِكَّةٍ كَانَتْ بِهِمَا رواه البخاري
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுýபைர் (ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி (2919)
0 comments:
Post a Comment