28 February 2012

ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா?


கேள்வி : அல் குரான் (62:9) - "நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது."
மேலே குறிபிட்டுள்ள வசனத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது, ஜும்மா தொழுகைக்காக அழைக்கப் பட்டால் வியாபாரத்தை விட்டு செல்லுங்கள். அல்லாஹ் அந்த நேரத்தில் வியாபாரம் செய்வதை தடுத்துள்ளான்.
நான் வோயாபாரம் செய்கிறேன். வெள்ளிக் கிழமைகளில் சீக்கிரமே பள்ளிக்கு செல்பவன் நான். ஆனால் எனது கடையை அடைப்பது இல்லை. நான் வியாபாரத்தை விட்டு விட்டாலும் எனது மாற்று மத தொழிலாளி(staff) கடையில் தான் இருப்பார். அப்போது வியாபாரமும் நடக்கும்(வியாபாரம் செய்வது எனது நிய்யத் இல்லை என்றாலும் கடை திறந்த இருப்பதால் வரும் வாடிக்கையாளர்களை விரட்ட முடியாது). அவர் தொலைவில் இருந்து வருவதால் வீட்டுக்கு போகாமல் கடையிலேயே தான் காலை முதல் இரவு வரை இருப்பார்.
இந்த சூழ்நிலையில் நான் வியாபாரம் செய்யலாமா? என்ன தான் அவர் மாற்று மதத்துகாரராக இருந்தாலும் வியாபாரம் நடப்பது என்னுடையது. அதில் கிடைக்கும் லாபம் என்னை வந்து சேரும். இப்படி நான் கடையை திறந்து வைத்திருப்பது கூடுமா? கூடாது என்றால் கடையை அடைத்து விட்டு அவரை வேறு இடத்தில அந்த ஒரு மணிநேரம் இருக்க ஏற்பாடு செய்யலாம்,இன்ஷா அல்லா. கண்டிப்பாக விளக்கம் தேவை

ஒரு ரக்அத் வித்தை 3 ஆக தொழலாமா? மற்றும் ஸஜ்தா ஸஹ்வு எப்போது?


கேள்வி :
1. விதர் தொழுகையில் குனூத் ஓத மறந்து விட்டால்,அதற்காக சஜ்தா சஹ்வு செய்யவேண்டுமா?
2.
அதேபோல்,ஒரு ரக்அத் விதர் என்ற நிய்யத்தில் தொழும் போது,குனூத் ஓத மறந்ததின் காரணத்தால் நான் தொழுகையை முடித்துக் கொள்ளாமல் தொடர்ந்து தொழுது மூன்றாவது ரகாத்தில் குனூத் ஓதி தொழுகையை முடித்துக் கொள்ளலாமா?

மக்காவில் சப்தமிட்டு தக்பீர் சொல்வது சரியா?


கேள்வி : மக்காவில் தொழும் போது இமாம் அல்லாஹு அக்பர் என்று சொன்ன பிறகு சப்தமாக வேறொருத்தர் இன்னும் சப்தமாக சொல்வார். நல்லா மைக் செட் இல்லாத காலத்தில் வேண்டுமென்றால் மக்களுக்கு கேட்காது என்பதற்காக   இப்படி இரண்டாவது ஒரு ஆள் சப்தமாக சொல்கிறார் என்று கூறலாம். ஆனால் இப்போது மக்காவில் இருக்கும் செட் உலகத்தில் சிறந்தது என்று கூறலாம். இமாம் பாத்திஹா சூராவுக்கு முன் மெதுவாக பிஸ்மில்லாஹ் சொன்னாலும் கணீர் என்று தெளிவாக கேட்கும். இப்படி இருக்க இந்த பழைய முறையை பின்பற்றுவது சரியா

வரதட்சணை விருந்து மவ்லூது விருந்து வித்தியாசம் என்ன?


கேள்வி : பிறந்தநாள், பெயர்சூட்டுதல், கத்னா செய்தல் போன்றவற்றிற்காக வீடுவீடாக இனிப்பு கொடுத்துவிடுதல், கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஏழாவது மாதம் ஆனதும் பாகுச்சோறு ஆக்கி பகிர்தல், சிறுவர்,சிறுமியர் குர்ஆனை முழுமையாக ஓதிமுடித்துவிட்டால் அதற்காக இனிப்பு கொடுத்துவிடுதல், மரணித்தவர்க்காக  40 ஆம் நாள் ஃபாதிஹா ஓதி பெட்டிச்சோறு போடுதல், மரணித்தவர் வீட்டிற்குச் சென்றால் அங்கு வாழைப்பழம் கொடுத்தல்- இவையெல்லாம் எங்கள் ஊரில் நடைமுடைப்படுத்தப்படும் சடங்கு சம்பிரதாயங்கள். நாம் இவற்றில் கலந்துக்கொள்ளாவிட்டாலும் நம் வீடு தேடி தின்பண்டங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். இவற்றை நாம் வாங்கலாமா?
மேலும் வரதட்சணை வாங்கிய மணமகன் வீட்டிலிருந்தும், மற்றும் பெண்வீட்டிலிருந்தும் நமக்கு சாப்பாடு கொடுத்துவிடுகிறார்கள். அதையும் வாங்கிக்கொள்ளலாமா?
 மொத்தம் 9 விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளேன். இவற்றில் எது எதற்கெல்லாம் அனுமதி இருக்கிறது? தயவுசெய்து விரிவாக பதில் தரவும்.

27 February 2012

அறிந்த செய்தியும் அறியாமை ரஷாதியும்


அறிந்த செய்தியும் அறியாமை ரஷாதியும்

இஸ்லாம் என்பது இறைவனுக்குரிய மார்க்கமாகும். இஸ்லாம் என்ற பெயரில் எந்த ஒரு சட்டத்தைக் கூறவும் நீக்கவும் இறைவனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
இஸ்லாம் இறை மார்க்கம் என்பதன் உண்மையான பொருள், இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் மார்க்கமாகக் கருதப்படாது. ஒன்றைச் சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

26 February 2012

திருமணத்தில் மணப்பெண்ணிற்கு நகை போடுவது வரதட்சணையா?

திருமணத்தில் மணப்பெண்ணிற்கு நகை போடுவது வரதட்சணையா?
ஒருவன் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன் என்பதை முன்வைத்து பெண்வீட்டாரிடமிருந்து தனக்காகப் பெறுகின்ற ஒவ்வொன்றும் வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்வாறு பெறப்படுவது பணமாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும், விருந்தாக இருந்தாலும், நகையாக இருந்தாலும் அவை வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

24 February 2012

ஒருக்களித்துப் படுத்தலும் ஆரோக்கியமும் (நபிமொழிகளில் நவீன விஞ்ஞானம்)



ஒருக்களித்துப் படுத்தலும் ஆரோக்கியமும்
நபிமொழிகளில் நவீன விஞ்ஞானம்

عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ  رواه البخاري

நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்.  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ரலி)
நூல் : புகாரி (247)