29 June 2011

கூட்டுத் துஆ நபிவழியா?

கூட்டுத் துஆ நபிவழியா?
ஜிப்ரீல் (அலை) அவர்களுடைய ஹதீஸில் கூட்டுத் துஆவிற்கு எந்த ஆதாரமும் இல்லை.
7256 عن كعب بن عجرة قال : قال رسول الله صلى الله عليه و سلم : احضروا المنبر فحضرنا فلما ارتقى درجة قال : آمين فلما ارتقى الدرجة الثانية قال : آمين فلما ارتقى الدرجة الثالثة قال : آمين   فلما نزل قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه قال : إن جبريل عليه الصلاة و السلام عرض لي فقال : بعدا لمن أدرك رمضان فلم يغفر له قلت آمين فلما رقيت الثانية قال بعدا لمن ذكرت عنده فلم يصلي عليك قلت آمين فلما رقيت الثالثة قال بعدا لمن أدرك أبواه الكبر عنده فلم يدخلاه الجنة قلت آمين (المستدرك - (ج 4 / ص 170)

கஅப் பின் உஜ்ரா (ரலி) அறிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் அனைவரும் மிம்பருக்கு (அருகில்) வாருங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அனைவரும் ஆஜரானோம்.  அப்போது முதல் படியில் ஏறும் போது "ஆமீன்'' என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும் போதும் "ஆமீன்'' என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும் போதும் "ஆமீன்'' என்று கூறினார்கள். அவர்கள் இறங்கிய உடன் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் (என்றைக்குமே) கேள்விப்படாத ஒன்றை இன்று உங்களிடமிருந்து செவியேற்றோமே என்று கேட்டோம்.
நான் முதல் படியில் ஏறும் போது ஜிப்ரீல் (அலை) எனக்கு காட்சி தந்து யார் இரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள் நான் ஆமீன் என்றேன். நான் இரண்டாவதில் ஏறும் போது யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள் நான் ஆமீன் என்று கூறினேன். நான் மூன்றாவதில் ஏறும் போது ஒருவனிடத்தில் அவனுடைய பெற்றோர்கள் வயோதிகப் பருவத்தை அடைந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலம்) அந்த இருவரும் இவனை சுவர்கத்தில் நுழைவிக்கவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறிúன்ன் என்றார்கள்.
அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல் : ஹாகிம் (7256)

மற்ற சில அறிவிப்புகளில் ஜிப்ரீல் (அலை) "ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள்.  நான் ஆமீன் என்றேன். என்று நபியவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட ஹதீஸில் பலவிசயங்களை நாம் கவனிக்க வேண்டும்.
இதில் ஒரு மனிதர் துஆ ஓத மற்றொரு மனிதர் ஆமீன் சொல்லலாம் என்பதற்கோ அல்லது பிற மனிதர்கள் ஆமீன் சொல்லலாம் என்பதற்கோ எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஏனென்றால் இது ஜிப்ரீல் என்ற மலக்கிற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் நடைபெற்றதாகும். அதிக பட்சம் ஒரு மலக்கு துஆ செய்தால் அதை கேட்கும் மனிதர் ஆமீன் கூறலாம் என்று சொல்லலாமே தவிர மனிதர்கள் தங்களுக்குள் கூட்டுத் துஆ ஓதலாம் என்பதற்கு இதில் ஆதாரமில்லை.

மேலும் ஜிப்ரீல் ஒவ்வொரு துஆ விற்குப் பிறகும் ஆமீன் என்று சொல்லுங்கள் என்று கூறிய பிறகே நபியவர்கள் ஆமீன் என்று கூறியதாக வந்துள்ளது. இதிலிருந்து இந்த ஹதீஸை ஆதாரம் காட்டியவர்கள் ஒரு துஆவை ஓதிய பிறகு ஆமீன் என்று சொல்லுங்கள் என்றால் தான் மற்றவர்கள் ஆமீன் என்று சொல்ல வேண்டும். ஆனால் நடை முறையில் கூட்டுத் துஆ என்ற பித்அத்தை உருவாக்கியவர்கள் அவ்வாறு செய்வதில்லை.

நபியவர்கள் ஆமீன் ஆமீன் ஆமீன் என்று சொல்லி இறங்கிய பிறகு ஸஹாபாக்க்ள் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் (என்றைக்குமே) கேள்விப்படாத ஒன்றை இன்று உங்களிடமிருந்து செவியேற்றோமே என்றார்கள். இதிலிருந்து ஒருவர் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் சொல்லுதல் என்பது நபியவர்கள் காலத்தில் அறவே இல்லாத ஒன்று என்பதை மிக மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். ஒருவர் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் சொல்லுதல் நபியவர்கள் காலத்தில் இருந்திருந்தால் ஸஹாபாக்கள் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்கள். இத்தகைய கேள்வியை கேட்டிருக்கவும் மாட்டார்கள்.

ஒரு பேச்சிற்கு இதை ஆதாரமாகக் கொண்டாலும் மிம்பர் படியில் ஏறும் போது நடைபெற்ற சம்பவமாகும். மிம்பரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்து ஒவ்வொரு தொழுகைப்பிறகும் , இன்ன பிற இடங்களிலும் செய்வதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம் என்பது அறிவீனமாகும். நபியவர்கள் கழிவறையில் நுழையும் போது ஓதிய துஆவை சாப்பிடும் போது ஓதுவது எப்படிக் கூடாதோ அது போன்று நபியவர்கள் மிம்பர் படியில் ஏறும் போது செய்த ஒரு செயலை வேறொரு இடத்தில் செய்தல் என்பதும் கூடாது.

மேலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதிய துஆ நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை. எனவே இதை ஆதாரமாகக் கொண்டு கூட்டுத் துஆ ஓதலாம் என்று கூறுபவர்கள்  யார் ஆமீன் சொல்வார்களோ அவர்களைத் தவிர வேறுயாருக்கும் கேட்காத அளவில் ஓதவேண்டும்.
 அவ்வாறு செய்வதற்கு இதனை ஆதாரம் காட்டுபவர்களால் ஒருபோதும் இயலாது

நபியவர்கள் தொழுகை கடமையாகி ஏறத்தாழ 10 வருடங்களுக்கும் அதிகமாக இருந்துள்ளார்கள். ஒரே ஒரு தொழுகையில் கூட அவர்கள்  துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் சொன்னதாக எந்த ஒரு ஹதீசும் கிடையாது. அவ்வாறு இவர்களால் காட்டவே இயலாது. ஜிப்ரீல் (அலை) அவர்களின் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு கூட்டுத் துஆ ஓதலாம் என்று சொன்னால் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் அதனை நமக்கு வழிகாட்டியிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் தொழுகைக்குப் பிறகோ, அல்லது மற்ற இடங்களிலோ கூட்டுத் துஆ ஓதியதாக ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸ் கூட கிடையாது..

மொத்தத்தில் மேற்கண்ட ஹதீஸ் அதில் கூறப்பட்டுள்ள விசயங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக நபியவர்களுக்கும், ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கும் நடைபெற்ற ஒரு சம்பவமாகும். அதிலுள்ள அறிவுரைகளை நாம் பேணி நடக்க வேண்டுமேயென்றி இதன் மூலம் கூட்டுத் துஆ ஓதலாம் என்பதற்கு இதில் எந்த ஆதாரமும் கிடையாது.

மேலும் இன்று நடைமுறையில் உள்ள கூட்டுத் துஆ முறையானது நபி வழிக்கும், திருக்குர்ஆனின் கட்டளைக்கும் எதிரானதாகும்.
அல்லாஹ் கூறுகிறான்
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான் (அல்குர்ஆன் 7 : 55)
இவ்வசனம்  இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையைக் கற்றுத் தருகிறது.
ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக அல்லாஹ்விடம் பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.
பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.
பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல் யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.
மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது.
இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும்.
ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.
இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3 comments:

Jafarullah Ismail said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சிறப்பான அறிவுப்பூர்வமான விளக்கங்கள்!

abdulazeesml said...

Assalamu alikum wr wb...

Thanks for your post

mashariqthowheedi said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...!
பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையே கேட்கப்படும் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் என்ற செய்தியில் ஸைத் அல்அம்மீ என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெறுவதாக தெரியப்படுத்தி இருந்தீர்கள்.
ஆனால், இந்த அறிவிப்பாளர் இடம்பெறாத இதே கருத்துடைய செய்திகள் ஏராளமான கிரந்தங்களில் இடம்பெறுகிறது. இவை எந்த வகையில் பலவீனம் என்பதை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆதாரங்கள் பின்வருமாறு:

1. مسند أبي داود الطيالسي (3 / 576):
2220 - حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا الرَّبِيعُ، عَنْ يَزِيدَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا نُودِيَ بِالصَّلَاةَ، فُتِحَتْ أَبْوَابُ السَّمَاءِ، وَاسْتُجِيبَ الدُّعَاءُ» قَالَ يَزِيدُ: وَكَانَ يُقَالُ: «الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةُ لَا يُرَدُّ»

2. مسند أبي يعلى الموصلي (6 / 353):
3679 - حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا إِنَّ الدُّعَاءَ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ فَادْعُوا»
[حكم حسين سليم أسد] : إسناده صحيح

3. مسند أبي يعلى الموصلي (6 / 354):
3680 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ بْنُ يُونُسَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ السَّلُولِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ مُسْتَجَابٌ فَادْعُوا»
[حكم حسين سليم أسد] : إسناده صحيح

4. صحيح ابن خزيمة (1 / 221):
425 - نا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ، حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ، نا إِسْرَائِيلُ بْنُ يُونُسَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ لَا يُرَدُّ، فَادْعُوا»
[التعليق] 425 - قال الأعظمي: إسناده صحيح بما بعده

5. صحيح ابن خزيمة (1 / 222):
426 - نا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خِدَاشٍ الزَّهْرَانُِ، قنا سَلْمُ بْنُ قُتَيْبَةَ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ لَا يُرَدُّ»
[التعليق] 426 - قال الأعظمي: إسناده صحيح

6. صحيح ابن خزيمة (1 / 222):
427 - نا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ الرَّمَادِيُّ، نا أَبُو الْمُنْذِرِ هُوَ إِسْمَاعِيلُ بْنُ عُمَرَ الْوَاسِطِيُّ، نا يُونُسُ، نا بُرَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدَّعْوَةُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ لَا تُرَدُّ فَادْعُوا» قَالَ أَبُو بَكْرٍ: يُرِيدُ الدَّعْوَةَ الْمُجَابَةَ نا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، نا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، نا إِسْرَائِيلُ بِمِثْلِ حَدِيثِ يَزِيدَ بْنِ زُرَيْعٍ
[التعليق] 427 - قال الأعظمي: إسناده صحيح

7. صحيح ابن حبان - مخرجا (4 / 593):
1696 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:594] الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ السَّلُولِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ يُسْتَجَابُ، فَادْعُوا» . [1: 2]

رقم طبعة با وزير =
(1694)
__________

[تعليق الألباني]
صحيح - «صحيح أبي داود» (534) .

[تعليق شعيب الأرنؤوط]
إسناده صحيح، بريد بن أبي مريم: ثقة، ولم يخرجا له، وباقي السند رجاله رجال الشيخين، وأبو إسحاق: هو عمرو بن عبد الله السبيعي.

Post a Comment