பரேலவிகள் என்று அழைக்கப்படும் தர்ஹா வழிபாட்டினர் மற்றும் தரீக்கா கூட்டத்தினரால் சிதைக்கப்பட்ட இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று இறைவனின் உருவம் பற்றிய நம்பிக்கையாகும். 
இறைவன் உருவமுள்ளவன் என்பதே குர்ஆன் மற்றும் நபிமொழிகள் எடுத்துரைக்கும் அடிப்படையாகும். 
 
  “உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்;
“உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்;உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.“  
  
என்ற நாகூர் ஹனீஃபாவின் பாடல் இவர்களின் நம்பிக்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. 
இறைவன் உருவமற்றவன் என்ற நம்பிக்கை இஸ்லாத்திற்கு எதிரான இறைவனை மறுக்கின்ற நம்பிக்கையாகும். குர்ஆனையும், சுன்னாவையும் பொய்யாக்கும் நம்பிக்கையாகும். 
இறைவனுக்கு அவனுக்கு மட்டுமே உரித்தான ஓர் தோற்றம் உண்டு. அது எந்த படைப்பினங்களுக்கும் ஒப்பானதோ, நிகரானதோ கிடையாது. அவனது தோற்றத்தை இவ்வுலகில் யாரும் காண முடியாது. அவனது உருவத்தை மறுமையில் சொர்க்கவாசிகள் காண்பார்கள் என்பதே குர்ஆன் சுன்னா எடுத்துரைக்கும் அடிப்படையாகும். 
 
  "உங்களில் எவரும் அவர் இறக்காத வரை தன் இறைவனைப் பார்க்க முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5215
இறைவன் உருவமுள்ளவன் என்பதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆனிலும், நபிமொழிகளிலும் நிறைந்து காணப்படுகிறது. அவற்றில் ஒரு சிலவற்றைக் காண்போம்.
 
இறைவன் அழகானவன்.
 
  "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். '' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் 131
 
    மறுமையில் இறைவனைக் கண்ணால் காணலாம்.
 மறுமையில் இறைவனைக் கண்ணால் காணலாம்.   
    
 மறுமையில் இறைவனைக் காண முடியும் என திருக்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
 
  அந்நாளில் சில முகங்கள் ஒளிவீசும்; தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

 (அல்குர்ஆன் 75:22, 23)
 
  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் இறைவனை (மறுமையில்) கண்கூடாகக் காண்பீர்கள்.

 அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7435
 
  (முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தபடி, "இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெüவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்'' என்று கூறிவிட்டு " சூரியன் உதிக்கும் முன்னரும், மறையும் முன்னரும் உமது இறைவனின் புகழைக் கொண்டு போற்றுவீராக!'' எனும் (50:39ஆவது) இறை வசனத்தை ஓதினார்கள்.

 அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 554, 573, 4851, 7434
 
சொர்க்க இன்பங்களில் மிகப் பெரியது இறைவனைக் காண்பது.
 
  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்து விடும் போது (அவர்களிடம்) அல்லாஹ், "உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?'' என்று கேட்பார்கள்.
  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்து விடும் போது (அவர்களிடம்) அல்லாஹ், "உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?'' என்று கேட்பார்கள்.அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது. 
  
 அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: முஸ்லிம் 266
 
  நபி (ஸல்) அவர்கள், " நன்மை செய்வோருக்கு நற்கூலியும், இன்னும் அதிகமும் உண்டு. '' என்ற (10:26) வசனத்தை ஓதினார்கள். "சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும், "சுவனவாசிகளே! (இதுவரை) உங்களுக்கு அளிக்கப்படாத ஒரு வாக்குறுதி உங்களுக்குக் காத்திருக்கின்றது'' என்று அழைப்பு விடுக்கப்படுவர். "அவன் எங்களது முகங்களை வெண்மையாக்கி, எங்களை சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?'' என்று அவர்கள் பதிலளிப்பார்கள். மீண்டும், "(இதுவரை) அளிக்கப்படாத வாக்குறுதி ஒன்று உங்களுக்குக் காத்திருக்கின்றது'' என்று அவர்களிடம் கூறப்படும். அவர்கள் அதே போன்று பதிலளிப்பார்கள். அப்போது, பாக்கியமிக்கவனும் உயர்ந்தோனுமான அவர்களது இறைவன் அவர்களுக்குத் தோன்றுவான். இது தான், " நன்மை செய்வோருக்கு நற்கூலியும், இன்னும் அதிகமும் உண்டு.'' என்ற (10:26) அல்லாஹ்வின் சொல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "பாக்கியமிக்கவனும், உயர்ந்தோனுமாகிய தங்களின் இறைவனுடைய முகத்தைப் பார்ப்பதற்கு வாக்களிக்கப்படுகின்றது'' என்று விளக்கமளிக்கின்றார்கள்.

 அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: முஸ்னத் அல்பஸ்ஸார் 328
 
  "சுவனவாசிகள், சுவனத்திற்குள் நுழைந்ததும், "சுவனவாசிகளே! அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு ஒரு வாக்குறுதி காத்திருக்கின்றது. அதை அவன் அவசியம் உங்களுக்கு நிறைவேற்றுவான்'' என்று ஓர் அழைப்பாளர் அழைப்பு விடுப்பார். "அவன் எங்கள் முகங்களை வெண்மையாக்க வில்லையா? எங்களுடைய எடைகளைக் கனமாக்கி, எங்களை சுவனத்தில் நுழைவித்து நரகத்திலிருந்து காக்கவில்லையா?'' என்று அவர்கள் கேட்பார்கள். அப்போது அவன் திரையை விலக்குவான். அவர்கள் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த தங்களுடைய இறைவனின் முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். அவனைப் பார்ப்பதை விட வேறெதுவும் அவர்களுக்கு விருப்பமானதாகவும் கண்களுக்குக் குளிர்ச்சியானதாகவும் இருக்காது. (நன்மை செய்வோருக்கு நற்கூலியும், இன்னும் அதிகமும் உண்டு. 10: 26 என்ற வசனத்தில் கூறப்படும்)  அதிகம் என்பது இது தான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: அர்ருஃயித்து லித்தாரகுத்னீ 112
 
அல்லாஹ்வின் கைகள்
 
  அல்லாஹ்வை, அவனது தகுதிக்குத் தக்கவாறு அவர்கள் மதிக்கவில்லை. மறுமை நாளில் அவனது பிடியில் பூமி முழுவதும் இருக்கும். வானங்கள் அவனது வலது கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் உயர்ந்தவன்.

 அல்குர்ஆன் 39:67
 
  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக் கொள்வான். பிறகு "நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?'' என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக் கொள்வான். பிறகு "நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?'' என்று கேட்பான்.

 அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4995
 
அல்லாஹ்வின் கால்கள்
 
  கெண்டைக் காலிலிருந்து திரை அகற்றப்பட்டு, அவர்கள் ஸஜ்தா செய்வதற்கு அழைக்கப்படும் நாளில் (அதற்கு) அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்.

 (அல்குர்ஆன் 68 : 42)
 
  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியி ருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.  
  
 அறிவிப்பவர் :  அபூசயீத் (ரலி) 
நூல் : புகாரி (4919)
சத்திய இஸ்லாத்தை சீர்குலைப்பதற்காக பரேலவிகளால் திணிக்கப்பட்ட இறைவன் உருவமற்றவன் என்ற கொள்கையிலிருந்து விடுபட்டு இறைவனுக்கு யாருக்கும், எதற்கும் ஒப்பில்லாத ஓர் தோற்றம் உண்டு. அவன் எந்த படைப்பினங்களுக்கும் ஒப்பானவன் இல்லை. இறைவனை மறுமையில் காணலாம் என்ற உண்மையான கொள்கையைப் பின்பற்றும் பாக்கியத்தை அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக!

0 comments:
Post a Comment