15 March 2023

நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால்…

 நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால்….


❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் ஒரு கருப்புக் கயிறு உனக்கு நன்மை செய்யும், தீமையைத் தடுக்கும் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் தாயத்து, தகடுகள், உன்னைப் பாதுகாக்கும் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் மண்ணறையில் அடங்கியிருப்பவரை அல்லாஹ்வின் அந்தஸ்தில் வைத்து விடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் இறந்தோரிடம் வேண்டுதலைக் கேட்பது மார்க்கம் என நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் இந்த மகான்தான் உன்னை மறுமையில் காப்பாற்றுவார் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் இந்த ஷைஹ் தான் எனது உள்ளத்தை நேர்வழியில் செலுத்துவார் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் இணைவைப்பு கவிதைகள் (மவ்லிதுகள்) படிப்பதுதான் மார்க்கம் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் உள்ளங்கை ஊறல் எடுத்தால் பணம் வரப் போகிறது என நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் மூக்கில் ஊறல் எடுத்தால் விருந்தாளி வரப்போகிறார் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் உள்ளங்கால் ஊறல் எடுத்தால் தபால் வரப்போகிறது என்று நம்பவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் ஒருவரைப் பற்றி பேசும் போது அவர் வந்துவிட்டால் அவருக்கு ஆயுசு நூறு என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் சூனியக்காரன் எங்கிருந்து கொண்டோ உன்னை முடக்கி விடுவான் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் பேய்களும், பிசாசுகள் உன்னை ஆட்டிப் படைக்கும் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் குழந்தை பெற்று திரும்பும் போது ஒவ்வொரு சந்திலும் முட்டையை எறிந்தால் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் சகோதரியை திருமணம் செய்யும் மச்சானுக்கு கால் கழுவுவது மார்க்கம் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை திருமணப் பந்தலில் வாழை மரத்தைக் கட்டினால் குழந்தைப் பாக்கியம் கிட்டும் என நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் திருமணத்தில் மாப்பிள்ளை மாலை போட்டால்தான் மங்களம் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் மஞ்சப்பை தான் மங்களகரமானது என்ற நம்பிவிடுவாய்
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் தாலிதான் மனைவியைக் காப்பாற்றும் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் ஆரத்தி எடுத்தால் அனைத்து சுபமாக மாறிவிடும் என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் ஜோதிடனும், பால்கிதாபும் உன் எதிர்காலத்தை அறிவார்கள் என நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் கழுதையைப் பார்த்தால் யோகம் பிறக்கும் என நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் சகுணத்தால் பாதிப்பு ஏற்படும் என நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் உனக்காக மற்றவர்கள் எழுந்து நிற்பதுதான் மரியாதை என்று நம்பிவிடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் தர்ஹாக்களில் அந்நியப் பெண்களின் நடனம்தான் இஸ்லாம் என்று சென்று விடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் கொடி ஊர்வலமும், கொட்டு, மேளமும் இஸ்லாமியக் கலாச்சாரம் என்று சென்று விடுவாய்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என உன்வாழ்க்கை மாறிவிடும்.
❎ நீ தவ்ஹீதை அறியவில்லை என்றால் இணைவைப்பாளனாய் மாறிவிடுவாய்..
இன்னும் எவ்வளவோ!
(நபியே!) அல்லாஹ்வைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் பாவ மன்னிப்புக் கோருவீராக! அல்லாஹ், உங்கள் நடவடிக்கைகளையும், தங்குமிடத்தையும் அறிகிறான்.
(அல்குர்ஆன் 47 : 19)

0 comments:

Post a Comment