📌📌 அல்லாஹ்வின் நாட்டப்படி வாழ்வாதாரம் தருபவை 📌📌
🍁🍁 இறையச்சம் 🍁🍁
🍀 யார் அல்லாஹ்வை அஞ்சுகிறாரோ அவருக்கு ஒரு வழியை அவன் ஏற்படுத்துவான். அவர் நினைத்துப் பார்க்காத விதத்தில் அவருக்கு உணவளிப்பான். 🍀
(அல்குர்ஆன் 65 : 2,3)
🍁🍁 முழுமையான நம்பிக்கை (தவக்குல்) 🍁🍁
🍀 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய முறையில் நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு உணவளிக்கப்படுவதைப் போன்று அவன் உங்களுக்கு உணவளிப்பான். நீங்கள் (பறவைகளைப்) பார்க்கவில்லையா! அவை வெறும் வயிற்றோடு காலையில் புறப்படுகிறது. நிரம்பிய வயிற்றோடு மாலையில் திரும்புகிறது. 🍀
அறிவிப்பவர் : உமர் இப்னு கத்தாப் (ரலி)
நூல் : திர்மிதி (2266)
🍁🍁 பாவமன்னிப்பு கோருதல் 🍁🍁
🍀 “உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்! அவன் மன்னிப்புமிக்கவனாக இருக்கிறான்” என்று கூறினேன்.
அவன் உங்கள்மீது தொடர்மழையைப் பொழியச் செய்வான்.
உங்களுக்குச் செல்வங்களையும், ஆண்மக்களையும் வழங்குவான். உங்களுக்குத் தோட்டங்களை ஏற்படுத்துவான். உங்களுக்காக ஆறுகளையும் உருவாக்குவான். 🍀
(அல்குர்ஆன் 71 : 10,11,12)
🍁🍁 இரத்த உறவுகளை அரவணைத்தல் 🍁🍁
🍀 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும். 🍀
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (2067)
🍁🍁 அல்லாஹ்வி்ன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துதல் 🍁🍁
🍀 “நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு (என் அருளை) அதிகப்படுத்துவேன். நீங்கள் மறுத்தால் எனது தண்டனை கடுமையானது” என உங்கள் இறைவன் அறிவித்ததை நினைவூட்டுவீராக! 🍀
(அல்குர்ஆன் 14 : 7)
🍁🍁 தர்மம் 🍁🍁
🍀 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன் என்று கூறினான். 🍀
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (5352)
🍁🍁 துஆ (பிரார்த்தனை) 🍁🍁
🍀 “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன். ” என உங்கள் இறைவன் கூறுகிறான். 🍀
(அல்குர்ஆன் 40 : 60)
🍁🍁 தொழுகையை நிலைநாட்டுதல் 🍁🍁
🍀 உமது குடும்பத்தினருக்குத் தொழுகையை ஏவுவீராக! அ(தைக் கடைப்பிடிப்ப)தில் பொறுமையை மேற்கொள்வீராக! நாம் உம்மிடம் வாழ்வாதாரத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் அளிக்கிறோம். இறையச்சத்திற்கே நல்ல முடிவு உண்டு. 🍀
(அல்குர்ஆன் 20 : 132)
0 comments:
Post a Comment