هل يجوز نبش قبور المسلمين؟
கேள்வி :
நான் வசிக்கும் தெருவில் மசூதிக்குச் சொந்தமான சிறிய இடம் மசூதியை விட்டும் சற்று பக்கத்தில் உள்ளது. மசூதிக்கு போதுமான வருமானம் இல்லாததால் இதில் உள்ள கல்லறைகளை இடித்து விட்டு அந்த இடத்தில் கடைகள் கட்டி அதன் மூலம் வருமானம் பெறலாம் என்பது என்னைப் போன்ற இங்கு வசிக்கும் இளைஞர்களின் கோரிக்கை. பாக்கியாத் என்ற அரபி மதரஸாவில் கல்லறைகளை இடித்து கடைகள் கட்டுவதற்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளனர். இதற்கு சரியான மார்க்கத் தீர்ப்பை வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு மேல் வேறு கட்டிடங்கள் கட்டலாமா ? என்பதற்குரிய மார்க்க விளக்கத்தை அறிவதற்கு முன்பாக உங்களுடைய கேள்வியில் உள்ள சில விஷயங்களை தெளிபடுத்த விரும்புகிறோம்.
நீங்கள் கல்லறைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். கல்லறைகள் என்பது கட்டப்பட்ட, பூசப்பட்ட கப்ருகளைத்தான் குறிக்கும். இது மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு காரியமாகும்.
عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ رواه مسلم
கப்றுகள் பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (1765)
وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا கப்ருகளின் மீது எழுதப்படுவதையும் தடுத்ததார்கள் என்று திர்மிதி 972 வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.
ஒரு கப்ரை மண்ணினால் மட்டும் மூடினால் மண்ணை சற்று குவியலாகவைத்தாலும் ஒரு சில மாதங்களில் அது உள்நோக்கி சென்று விடும். ஒரு கப்ர் பூசப்படும் போதும் கட்டப்படும் போதும் அது நிரந்தரமாகிவிடும். இது இறைவனுக்கு இணைகற்பிக்கின்ற காரியங்களின் பக்கம் கொண்டு சேர்த்து விடும், இதன் காரணமாகத்தான் பூசப்பட்டோ, கட்டப்பட்டோ ஒரு கப்ர் இருக்குமென்றால் அவற்றை உடைத்தெறிய வேண்டும் என்று பொறுப்பாளர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ قَالَ قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ رواه مسلم
அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாரிப் (ரலிரி) அவர்கள் என்னிடம், ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (1764)
أَنَّ ثُمَامَةَ بْنَ شُفَيٍّ حَدَّثَهُ قَالَ كُنَّا مَعَ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ بِأَرْضِ الرُّومِ بِرُودِسَ فَتُوُفِّيَ صَاحِبٌ لَنَا فَأَمَرَ فَضَالَةُ بْنُ عُبَيْدٍ بِقَبْرِهِ فَسُوِّيَ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِتَسْوِيَتِهَا رواه مسلم
ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள 'ரோடிஸ்' தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்றைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்றைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்'' என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (1763)
எனவே மார்க்க அடிப்படைகளுக்கு மாற்றமாக கட்டப்பட்டுள்ள கல்லறைகள் அந்த நிலையில் இருந்து மாற்றப்படுவது கட்டாயமானதாகும்.
இப்போது இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டடங்கள் கட்டுவது கூடுமா? என்பதைப் பற்றி பார்ப்போம்.
அடக்கம் செய்யப்பட்ட இடத்தை வேறு கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை. ஆனால் அந்த நிலத்தை நன்றாக தோண்டி எடுத்து அதில் மனித எலும்புகள் இருக்குமென்றால் அவற்றை உடைத்து விடாமல் வேறு இடத்தில் புதைத்துவிட வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَأَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي فَقَالُوا لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ فَأَمَرَ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ ثُمَّ بِالْخِرَبِ فَسُوِّيَتْ وَبِالنَّخْلِ فَقُطِعَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்; ''பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) என்னிடம் விலை கூறுங்கள்!'' என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் ''இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்!'' என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணைவைப்பவர்களின் கப்ருகளைத் தோண்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அவர்களின் கட்டளைப்படியே பாழடைந்த இடங்கள் சீர் செய்யப்பட்டன; பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன; பள்ளிவாசலின் கிப்லா திசையில் (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை வரிசையாக (நபித்தோழர்கள்) நட்டனர்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (1868)
மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசல் இணைவைப்பவர்களின் கப்ருகள் இருந்த இடத்தில்தான் கட்டப்பட்டது. நபியவர்கள் பள்ளியைக் கட்டுவதற்கு முன்பாக அந்த கப்ருகளை நன்றாக தோண்டியெடுதத பிறகுதான் அந்த இடத்தில் பள்ளிவாசலைக் கட்டியுள்ளார்கள். இதிலிருந்து கப்ருகள் உள்ள இடத்தை நன்றாக தோண்டியெடுத்த பின் அங்கு கட்டிடங்கள் கட்டுவது கூடும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
சிலர் பின்வரும் செய்தியை ஆதாரம் காட்டி முஸ்லிம்களின் கப்ருகளைத் தோண்டக்கூடாது எனக்கூறுகின்றனர்.
حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ قَالَ أَخْبَرَتْنِي عَمْرَةُ قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ كَسْرَ عَظْمِ الْمُؤْمِنِ مَيْتًا مِثْلُ كَسْرِهِ حَيًّا رواه أحمد
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மய்யித்தாக உள்ள நிலையில் இறைநம்பிக்கையாளரின் எலும்பை உடைப்பது உயிரோடு உள்ள நிலையில் அதனை உடைப்பது போன்றதாகும்
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : அஹ்மது (23172)
மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸஃத் பின் ஸயீத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மனனத் தன்மையில் மோசமானவராவார். இன்னும் பல ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரைக் குறைகூறியுள்ளனர். எனவே இவரது அறிவிப்பு ஆதாரமாகக் கொள்ளப்படாது.
முஸ்லிம், காஃபிர் என்ற வித்தியாசமில்லாமல் பொதுவாக எந்த மய்யித்தின் எலும்பையும் உடைக்கக்கூடாது என்பதுதான் நபியவர்களிடமிருந்து நம்பகமானவர்கள் அறிவிக்கின்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகும்.
واخبرنا) أبو الحسن العلوي انبأ أبو حامد ابن الشرقي ثنا محمد بن يحيى غير مرة ثنا أبو احمد الزبيري ثنا سفيان عن يحيى بن سعيد عن عمرة عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال كسر عظم الميت ككسره حيا ) السنن الكبرى للبيهقيج 4 / ص 58(
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மரணித்தவரின் எலும்பை உடைப்பது உயிருள்ள நிலையில் அதை உடைப்பது போன்றதாகும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : பைஹகி. பாகம் : 4 பக்கம் : 58
நபி (ஸல்) அவர்கள் பொதுவாக எந்த மரணித்தவரின் எலும்பையும் உடைக்கக்கூடாது என்று கூறியுள்ளார்கள். கப்ருகளை தோண்டி எடுப்பது இறந்தவர்களின் எலும்புகளை உடைக்கக்கூடிய காரியமாக இருந்திருத்தால் நபியவர்கள் பள்ளிவாசல் கட்டுவதற்காக இணைவைப்பவர்களின் கப்ருகளைத் தோண்டியெடுக்குமாறு கூறியிருக்கமாடடார்கள்.
மேலும் மய்யித்தின் எலும்புகளை உடைக்கக்கூடாது என்பதின் கருத்து மரணித்த ஒருவரின் எலும்புகளை உடைக்கக்கூடாது என்பதுதான். மாற்றுமதத்தவர்களிடம் இந்தப் பழக்கம் இருக்கிறது.
ஒரு வாதத்திற்கு மையவாடியில் கிடக்கும் எலும்புகளை உடைப்பதையும் மேற்கண்ட ஹதீஸ் குறிக்குமென்று சொன்னால் பொதுவாக முஸ்லிம்களின் மையவாடியில் நாம் குழிதோண்டும் போது மக்கிய எலும்புகள் வரத்தான் செய்கின்றன. எலும்புகளை உடைக்கக்கூடாது என்ற காரணத்தைக் காட்டி குழியே தோண்டக்கூடாது என்று கூறுவதில்லை. ஏனென்றால் கப்ருகளை தோண்டுவதினால் எலும்புகள் உடையாது.
மேலும் ஒரு வாதத்திற்காக நாம் கப்ருகளைத் தோண்டும் போது ஒரு உடலே இருந்தாலும் அந்த உடலை எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்வது தவறானது கிடையாது. இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ عَنْ شُعْبَةَ عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ دُفِنَ مَعَ أَبِي رَجُلٌ فَلَمْ تَطِبْ نَفْسِي حَتَّى أَخْرَجْتُهُ فَجَعَلْتُهُ فِي قَبْرٍ عَلَى حِدَةٍ رواه البخاري
என் தந்தையுடன் இன்னொருவர் அடக்கம் செய்யப்பட்டார்; ஆயினும் எனது மனம் அதை விரும்பவில்லை. எனவே அவரது உடலை வெளியிலெடுத்து அதைத் தனி கப்றில் அடக்கம் செய்தேன்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : புகாரி (1352)
மேற்கண்ட ஜாபிர் (ரலி) அவர்களின் சம்பவம் நபயிவர்களின் காலத்தில் நடைபெற்றதாகும். ஒரு உடலை தோண்டியெடுத்து இன்னொரு இடத்தில் அடக்கம் செய்வது தடைசெய்யப்பட்ட ஒரு காரியம் என்று சொன்னால் நபியவர்கள் உயிரோடு இருக்கும்போது நடைபெற்ற இந்தக் காரியததை இறைவன் இறைச் செய்தி மூலம் தன்னுடைய தூதருக்குத் தெரிவித்து அதற்கு தடைவிதித்திருப்பான்.
எனவே அடக்கம் செய்யப்டும் இடத்தை வேறு வகைக்காக பயன்படுத்த வேண்டுமென்றால் அந்தக் கப்ருகளை நன்றாகத் தோண்டியெடுத்து அதில் எலும்புகள் கிடந்தால் அதனை வேறு இடத்தில் புதைத்து விட வேண்டும். உடலே இருந்தாலும் அதனை வேறு இடத்தில் அடக்கம் செய்து விட வேண்டும். பிறகு அந்த இடத்தை வேறு வகைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தோண்டி எடுக்காமல் கப்ரின் மீது கட்டடங்கள் கட்டுவது கூடாது. அவற்றை கண்டிப்பாகத் தவிரந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்
4 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்.
kabirkaludaiya kabarai udaitthu thaan rasool (sal) avargal kaddidam kaddiullarkal pathil sariyaga eluthavum
சகோ. நாசிர் அவர்களுக்கு, மறைவான ஞானம் அல்லாஹ்வைத் தவிற யாருக்கும் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. அதே குர்ஆனில் மனிதனைப் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹ் மலக்குகளிடம் சொல்லும் போது. ஒருவருக்கொருக்கொவர் ரத்தத்தை ஒட்டக் கூடிய மனிதனையா படிக்கப்போகிறாய்? என்று மலுக்குகள் கூறுவதாக வருகிறது. இந்த மறைவான ஞானம் மலக்குகளுக்கு எப்படி தெரிந்தது? - அமீன்- ஜித்தா
சகோ அமீன் ! மறைவான ஞானம் மலக்குகளுக்கு இல்லை ! ஆனால் ஏறகனவே அவர்கள் ஒரு படைப்பை பார்த்துள்ளார்கள் அதாவது ஜின் சமூகம் ! அவர்களும் ரத்தத்தை ஒட்டி யும் , சண்டை இட்டும் வாழ்ந்துள்ளார்கள் . இதை அடிப்படையாக வைத்தே மலக்குகள் அல்லாஹ்விடம் சொன்னார்கள்
Post a Comment