இன்றைய நிலையில் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த தானம் செய்தல் , பார்வையிழந்தவர்களுக்கு கண்தானம் செய்தல் போன்ற நல்ல
காரியங்கள் வலியுறுத்தப் பட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த
சேவைகளின் மூலம் இலட்சக் கணக்கான மக்கள் புது வாழ்வைப் பெற்றுள்ளனர்.
பார்வையிழந்த எத்தனையோ பேர் கண்ணொளி பெற்றுள்னர். இப்படிப்பட்ட
சூழ்நிலையில் இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் கண்தானம் செய்வது
மார்க்கத்திற்கு மாற்றமானது. அவ்வாறு செய்வது கூடாது என பிரச்சாரம்
செய்கின்றனர். இவர்கள் கூறுவது மார்க்க அடிப்படையில் சரியானதா? எனக்
காண்போம்.
முதலில் கண்தானம் என்றால் என்னவென்பதை நாம் அறிந்து கொள்வோம். கண்தானம் என்பது நாம் உயிரோடு இருக்கும் போது செய்கின்ற ஒன்றல்ல. மாறாக நாம் இறந்த பின், மண்ணோடு மண்ணாக மக்கி வீணாகப் போகின்ற நம்முடைய கண்களைத்தான் இவ்வுலகில் உயிரோடு வாழ்ந்தும், பார்வையிழந்து தவிக்கின்ற மக்களுக்காக நாம் தானம் செய்கின்றோம்

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்
'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' (5 : 32 )

ஒரு உயிரை வாழவைப்பதற்குரிய அனைத்து உதவிகளையும் மேற்கண்ட திருமறைவசனம் பொதிந்துள்ளது. இதில் ஒன்று கூடும், மற்றொன்று கூடாது என்று யாராலும்கூறமுடியாது.
மேலும் நபியவர்கள் கூறுகிறார்கள்.
தானம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடûமாயகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதும் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே (தானம் செய்வதற்கான
பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்,,,,,,? எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் ஏதேனும் கைத்தொழில் செய்து தாமும் அதன் மூலம் பலனடைந்து தானமும் செய்ய வேண்டும் என்றனர். அதுவும் முடியவில்லையாயின் எனக் கேட்டதற்குதேவையுடைய உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும் எனபதிலளித்தார்கள். தோழர்கள் அதுவும் இயலவில்லையாயின் என்றதும் நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தானமாகும் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூ மூஸா (ரலி) நூல் ; புகாரி (1445)
தேவையுடைய உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நபியவர்கள் பயன்படுத்தியுள்ள் வாசகம் பணத்தால், பொருளால் செய்கின்ற
உதவியைக் குறிக்காது மாறாக இவையல்லாத முறையில் செய்கின்ற உதவியைத்தான் நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தேவையுடையவர்களின் பட்டியலில் கண்களை இழந்து துயருரக் கூடியவர்களும் உள்ளடங்குவார்கள். எனவே அவர்களுக்கு நம்முடைய கண்களை நாம் இறந்த பிறகு தானமாக வழங்குவது நபியவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள உதவியின் வகையைச் சார்ந்ததாகும்.
கண்தானம் செய்வது கூடாது என்று வாதிடக் கூடியவர்கள் பின்வரும் ஹதீஸை
ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மய்பித்துடைய எலும்பை உடைப்பது உயிருடன் அதன் எலும்பை முறிப்பதைப் போன்றதாகும்
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் ; அஹ்மத்
இந்த ஹதீஸின் அடிபப்படையில் கண்தானம் செய்வதால் கண்ணிலுள்ள எலும்புகளை முறிக்கக் கூடிய நிலை உண்டாகிறது. எனவே கண்தானம் செய்வது
மார்க்கத்ததிற்கு மாற்றமானது என்று கூறிகின்றனர்.
இது கண்ணின் அமைப்பபை பற்றி அறியாததால் ஏற்பட்ட குற்றச்சாட்டாகும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கண்தானம் செய்வதற்காகவோ என்னவோ தெரியவில்லை நம்முடைய உடலில் எலும்புகளோடு தொடர்பில்லாத ஒரு பகுதியாகத்தான் இறைவன் கண்களைப் படைத்துள்ளான். நம்முடைய கண்கள் எந்த ஒரு சின்னஞ் சிறிய எலும்புகளோடும் தொடர்பில்லாத பகுதியாகத்தான் நம்முடைய முகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய கண்களை தானம் செய்வதால் எந்த ஒரு
எலும்பும் முறிவதில்லை. எனவே மேற்கண்ட ஹதீஸை ஆதாரம் காட்டி கண்தானம் செய்வது கூடாது என்று கூறுவது தவறான வாதமாகும்.
ஒரு வாதத்திற்கு கண்தானம் செய்வதால் எலும்பு முறிவதாக வைத்துக்
கொண்டாலும் நிர்பந்தத்திற்கு அதைத் தானம் செய்வதில் தவறு கிடையாது.
நபியவர்கள் இறந்தவரின் எலும்பை முறிக்கக் கூடாது என்று கூறியிருந்தாலும்
போஸ்ட் மார்ட்டம் போன்ற நிர்பந்த சூழ்நிலைகளில் அது ஆகுமாவது போல்
கண்தானம் செய்வதும் நிர்பந்தத்தில் உள்ளடங்கிவிடும். அல்லாஹ் கூறுகிறான்.
வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (அல் குர்ஆன் 2: 173)

கண்தானம் செய்யக் கூடாது என்போர் பின்வரும் ஹதீஸையும் ஆதாரம் காட்டுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு அடியானும் அவன் எந்நிலையில் மரணதித்தானோ அதே நிலையில்தான் மறுமையில் எழுப்பப்படுவான்
அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் (5126)
இந்த ஹதீஸின் அடிப்படையிலும் கண்தானம் செய்வது தவறு எனக் கூறமுடியாது.
ஏனென்றால் நபியவர்கள் எந்த நிலையில் மரணிக்கின்றானோ அதே நிலையில் தான் எழுப்பப்படுவான் என்றுதான் கூறியுள்ளார்கள். மாறாக எந்த நிலையில் அடக்கம் செய்யப்படுவானோ அதே நிலையில் எழுப்படுவான் என்று கூறவில்லை.
கண்தானம் செய்கின்ற ஒருவர் அவர் மரணிக்கும் போது கண்களோடுதான்
மரணிக்கின்றார். அதன் பிறகுதான் அவருடைய கண்கள் எடுக்கப்படுகின்றன. எனவே இந்த ஹதீஸின் விளக்கம் எந்த நிலையில் மரணித்தானோ அதே நிலையில் எழுப்பப்படுவான் என்று வைத்துக் கொண்டாலும் இவர் மரணிக்கும் போது கண்களோடுதான் மரணிக்கின்றார். எனவே மறுமையிலும் கண்களோடுதான் வருவார். ஏனென்றால் ஒருரை நாம் முழு உடலோடு அடக்கம் செய்தாலும் அவருடைய அனைத்துப்பகுதிகளும் சிலவாரங்களில் மக்கிப் போய்விடத்தான் செய்யும். இவர்கள் எப்படி முழுஉடலோடு மறுமையில் எழுப்படுவார்களோ அது போலத்தான் மக்கிப் போகக் கூடிய கண்களை தானம் செய்து ஒருவருக்கு கண்ணொளி பெறுவதற்கு
துணைசெய்தவரும் மறுமையில் கண்களோடுதான் வருவார்.
எனவே கண்தானம் செய்வது திருமறைக்குர்ஆனும், நபிமொழிகளும்
வலியுறுத்துகின்ற ஒரு நல்ல காரியம் ஆகும். எனவே இது போன்ற தானங்களைச்
செய்வது நமக்கு மறுமையில் நன்மைகளைப் பெற்றுத் தருகின்ற மிகச் சிறந்த
நல்ல காரியம என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

0 comments:
Post a Comment